மலையில் மோதினால் மண்டை தான் உடையும்
கடந்த 2021ல் 'நீட்' தேர்வு ரத்து, காஸ் சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என பொய்களை கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தி.மு.க., இப்போது கூப்பன் கொடுப்பதாக சொல்கின்றனர். ஏனென்றால், அதில் கமிஷன் கிடைக்கும்.
கிராமத்தில் பிறந்தவர்கள் படும் கஷ்டம் தெரிந்து தான், 'அம்மா கிளினிக்' என்ற திட்டம் கொண்டு வந்தோம். அதை, தி.மு.க., அரசு ரத்து செய்தது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2,000 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும்.
அ.தி.மு.க., மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறுகிறார் ஸ்டாலின். பிரதமராக மூன்று முறை வென்றுள்ளார் மோடி. அவருடன் கூட்டணி வைப்பதில் தவறு இல்லை. ஸ்டாலின் மத சாயம் பூசி நாடகம் நடத்தி வருகிறார். பிரதமரை எதிர்த்து சவால் விடும் ஸ்டாலினே, மலையில் மோதினால் மண்டை தான் உடையும்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்