Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மருத்துவமனையில் இருந்து தேர்தல் பணி செய்யும் வானதி

 மருத்துவமனையில் இருந்து தேர்தல் பணி செய்யும் வானதி

சென்னை: கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ., சார்பில், அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, கடந்த 10ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், வேட்பாளர் இல்லாமலேயே அத்தொகுதியில் பா.ஜ.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இருந்தபடியே, தேர்தல் பணிகளை வானதி மேற்கொண்டு வருகிறார்; அங்கிருந்தே வீடியோ வெளியிட்டு, தனக்கு ஓட்டளிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

தினசரி பிரசாரம், பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது, ஓட்டுச்சாவடி அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, மருத்துவமனையில் இருந்தபடியே அவர் ஒருங்கிணைத்து வருவதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

வானதி அழைப்பை ஏற்று, டில்லி முதல்வர் ரேகா குப்தா, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் அத்தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதற்கிடையே, வானதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் பேசும் பேச்சுகள், அவர் பதற்றத்தில் இருப்பதை காட்டுகின்றன.

'அவை, தோல்வி பயத்தால் வந்த பதற்றம் என்பதை அனைவரும் அறிவர். பார்லிமென்ட், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது நெடுங்கால கனவு.

'அதை நனவாக்க, லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த, தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. வழக்கம்போல காங்., -- தி.மு.க., அரசியலாக்கி வருகின்றன' என கூறியுள்ளார்.

Advertisement