வாகனங்களில் தீவிர சோதனை
கள்ளக்குறிச்சி: சட்டசபை தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி தனி சட்டசபை தொகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகனங்களில் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் வாக்களர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்களை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பல்வேறு இடங்களில் வாகனங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தியாகதுருகம் - ரிஷிவந்தியம் சாலையில் பி.டி.ஓ., கொளஞ்சிவேலு தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வடதொரசலுார் பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்களை மடக்கி சோதனை செய்து வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்