விஜய் தொகுதியில் கமல் பிரசாரம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
தவெக தலைவர் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் அனைவரும் பிரசாரத்தில் உள்ளனர். மாநிலம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை கமல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார்.
இந்நிலையில், கமல் வரும் 17 ம் தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளார். ஏப்.,20 வரை அவர் 26 தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதற்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
இதன்படி,ஏப்.,17: துறைமுகம், பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம்
ஏப்.,18: தி.நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், வேளச்சேரி
ஏப்.,19: அவிநாசி, கோவை தெற்கு
ஏப்.,20: திருச்சி கிழக்கு, திருவரங்கம், லால்குடி
விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.
Advertisement
தூக்கம் வரலையா ஆண்டவரே என் கிட்ட டிப்ஸ் கேளுங்க நிறைய இருக்கு சொல்லட்டுமா
வீராதி வீரர் சூராதி சூரர் நாவலர் தமிழ் குடிமகன் பிரசாரம் தொடங்க வருகிறார் வருகிறார் வருகிறார் எல்லா மக்கள் இருக்கும் இடத்தை விட்டு காலி செய்து வேறு எங்கேயாவது அல்லது வேறு மாநிலத்திற்காவது அப்போது ஒடி ஒளிந்துகொள்ளுங்கள் இல்லையே அவரது கன்னி பேச்சு காதால்
கேட்கவே முடியாது கூடவே ஒரு மொழி பெயர்பாளைரையும் அழைத்து வருகுகிறார் அவருக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமே கிடையாது கூட்டம் அதிகமாக இருக்குமானதால் உட்கார நாற்காலியை போடா மாட்டார்கள் அப்படியே போட்டால் நாற்காலி திருட்டு போயிடுமாம்
அப்போ ஜோசப் விஜய் மலாதேன்..அப்பரும் அண்ணன் பேச ஆரம்பிக்கும் .. . முன்னாடி .. பேச்சை கேட்க விரும்பும் மக்கள் ... 6 நாள் ஆபீஸுக்கு முன் கூட்டியே லீவ் போட்டு விடவும்.. .. காதில் இரத்தம் வந்தால் கம்பேனி பொறுப்பல்ல ....
கூடவே மொழிபெயர்ப்பாளர் ஒருவரையும் அழைத்துச்செல்லுங்கள் .ஆனா ஒண்ணு அந்த ஆளுக்கும் நீங்க பேசுறது புரியவே வாய்ப்பில்லை
ஓடி போயிடுங்க அருகில் வராதீங்க. பாவம் ஊடக நண்பர்கள் வேறு இல்லை. மாட்டிகிட்டாங்க. காதில் பஞ்சு வைத்து கொள்ளவும் இல்லையையென்றால் காது வழியே ரத்தம் வந்துடும்.

கமல் யாருக்காக ஆவது பிரச்சாரம் செய்தால் அந்த வேட்பாளர் காலி