இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்; சின்னத்தை மாற்றி ஓட்டு கேட்ட செங்கோட்டையன்
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசாரத்தின் போது இரட்டை இலைக்கு ஓட்டு போடுமாறு செங்கோட்டையன் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தவர் செங்கோட்டையன். தமிழகம் முழுவதும் தவெக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டி பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தவெக வேட்பாளரை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
வாகனம் ஒன்றில் இருந்தபடியே அங்கு கூடியிருந்த மக்களிடம் செங்கோட்டையன் ஓட்டு சேகரித்தார். அப்போது, விசில் சின்னத்துக்கு பதில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார்.
அடுத்த கணமே சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், இரட்டை இலை என்றே கேட்டு, கேட்டு பழகிவிட்டேன், என்று கூறி சமாளித்தார். பின்னர், தவெகவின் விசில் சின்னத்தை கூறி, அதற்கு ஓட்டு போடுமாறு வாக்காளர்களிடம் கூறினார்.
Advertisement
இவரப் பத்திய எதையும் கண்டுக்காம நல்ல மரியாதையாகத்தான் எடப்பாடி வைத்திருந்தார். ஆனா இந்த வயசுல அங்க போய் வைப் பண்ணனும்னு ஆச உள்ளவர யாரு என்ன பண்ண முடியும்? விதி யார விட்டுச்சு?
வெளியே விசிலும் உள்ளே இலையும் கொண்ட விசித்திரமான செங்கோட்டையன் நான்.
செங்கோட்டையன் இரட்டை எல்லையில் சாப்பிட்டவர் படுத்து உறங்கியவர் அப்படி இருக்கும்போது அவரை அறியாமலே இரட்டை இலை என்றால் அது அவரது ஆதரவு பெட்ர சின்னமாகத்தானே இருக்கும் அடுத்து கட்சியில் பணம் வாங்கிக்கொண்டு தாய் கட்சிக்கு உப்புத்தின்றகாரணத்திற்காக உழைப்பவர் வாழ்க தாய் கட்சிக்கு அவரது கட்சி பனி தொடர்க
வெய்யிலின் உக்கிரம் தாள முடிய வில்லை. இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் தேர்தல் வைக்கலாமா? ஆனால் தொப்பை உள்ளவர்கள் சிறிது கரையக்கூடும்.கனவுலகத்தில் மிதக்கும் அவர்களுக்கு ஜெயிக்கா விட்டாலும் அதுவும் அவர்களுக்கு லாபம் தானெ?

மனதில் இலை துளிர் விடுகிறதோ?