காமராஜர் அமைப்புகள் 15 தொகுதிகளில் போட்டி
காமராஜர் அமைப்புகள் இணைந்து, மக்கள் நல கூட்டணி என்ற பெயரில், 15 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
இதுகுறித்து, மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், செயலர் ரங்கராஜன் ஆகியோர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைக்கும் நோக்கத்துடன், காமராஜர் தொண்டர்கள் முன்னணி, ஜெபமணி ஜனதா மக்கள் நல்வாழ்வு கட்சி, மக்கள் நல்லாட்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, மக்கள் நல கூட்டணியை அமைத்துள்ளோம்.
வரும் சட்டசபை தேர்தலில், நாங்கள் தேர்வு செய்துள்ள 15 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.
சென்னை மயிலாப்பூர், ஆலந்துார், கொளத்துார், பெரம்பூர், சோழிங்கநல்லுார், துாத்துக்குடி, காஞ்சிபுரம், வாணியம்பாடி உட்பட, 15 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம்.
முதல் கட்டமாக, ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். மக்களிடம் எங்களின் நியாயமான கோரிக்கைகைளை எடுத்து கூறி, ஆதரவை திரட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்