பெயர் விடுபட்டாலும் ஓசூரை கைப்பற்றிய 'மாஜி'
ஓசூர் தொகுதியில், பா.ஜ., செல்வாக்குடன் உ ள்ளதால், அத்தொகுதி கிடைக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். தன் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலையான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, இத்தேர்த லில் போட்டியிட முடிவு செய்து சென்னையில் முகாமிட்டார். அதேநேரம், ஓசூர் தொகுதியை பெற பா.ஜ.,வும் தீவிரமாக முயற்சி செய்தது.
இந்நிலையில் தான், அ.தி.மு.க., வேட்பாளர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதில் பாலகிருஷ்ணா ரெட்டி பெயர் இல்லை. ஓசூர் பா.ஜ.,வுக்கு சென்றுவிட்டதாக அ.தி.மு.க.,வினர் நினைத்தனர். ஆனால், பழனிசாமியை சந்தித்து ஓசூர் தொகுதியைப் பெற பாலகிருஷ்ணா ரெட்டி கடும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதையடுத்து, தளி தொகுதி பா.ஜ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அ.தி.மு.க., அறிவித்தது. அதனால், ஓசூர் தொகுதியில் பா.ஜ., போட்டி யிடாது என்பது தெளிவானது. எப்படியோ, ஓசூர் தொகுதியை போராடி தக்கவைத்துக் கொண்ட பாலகிருஷ்ணா ரெட்டி, அங்கு போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்