'கருணாநிதி உடலை அடக்கம் செய்திருக்க முடியாது'
துாத்துக்குடியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அளித்த பேட்டி:
ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தி.மு.க., தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் ஒதுக்க முடியவில்லை. ஜெயலலிதா நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்பதற்காக வழக்கு தொடுத்தனர். கருணாநிதி மறைந்ததும், அந்த வழக்கை இரவோடு இரவாக வாபஸ் பெற்றனர்.
வழக்கு தடையாக இருந்ததால், காந்தி மண்டபம் வளாகத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் எழுப்ப இடம் தருவதாக அப்போதைய முதல்வர் பழனிசாமி தி.மு.க.,வினரிடம் கூறினார். ஆனால், நீதிமன்றத்தை அணுகி என்னவெல்லாம் செய்தனர் என தெரியவில்லை. ஒரே நாளில் அனுமதி வாங்கினர்.
நீதிமன்ற அனுமதி வந்ததும், அ.தி.மு.க., அரசு பெருந்தன்மையாக மேல் முறையீடு செய்யவில்லை. மேல்முறையீடு செய்திருந்தால் வழக்கு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் நீடித்திருக்கும். கருணாநிதியின் உடலை அடக்கம் செய்திருக்க முடியாது. அரசியல் நாகரிகம் கருதி, ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அப்போதைய முதல்வர் பழனிசாமியும், துறை அமைச்சரான நானும் கையெழுத்திட்டதால், கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்