கரூர் தொகுதி திமுக வேட்பாளர் நிறுவனத்தில் வருமானவரி ரெய்டு!
கரூர்: கரூர் திமுக வேட்பாளர் ஜவுளி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கரூர் தொகுதியில் திமுக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டவர் ஆசி. தியாகராஜன். திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர். செந்தில் பாலாஜி, கோவை தெற்கு தொகுதியில் இம்முறை போட்டியிடுவதால், கரூர் தொகுதிக்கு ஆசி தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அவர் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் அவர் பங்குதாரர் ஆக உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. அங்குள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியது.
சோதனை எதற்காக நடைபெற்றது, என்ன காரணம் என்பது பற்றிய எந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும் சோதனையின் போது ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்றும் தகவல்கள் வெளியாகவில்லை.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்