'குட்டி ஸ்டாலின்' பேனா தேடுகிறார்
தஞ்சாவூரில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து தினகரன் பேசியதாவது:
தி.மு.க., திருந்திவிட்டது என நம்பி, கடந்த தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், தி.மு.க., திருந்தவே இல்லை. ஒரு குடும்பம் மட்டுமே, இந்த ஆட்சியில் பலன் பெற்றுள்ளது.
அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து, ஒரே குடும்பத்துக்கு பணமாக செல்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என, 'குட்டி ஸ்டாலின்' உதயநிதி சொன்னார். ஆனால், இதுவரை ரத்து செய்யவில்லை; கையெழுத்து போடுவதற்காக இன்னமும் பேனாவை தேடிக்கொண்டு இருக்கிறார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், இளைஞர்கள் வேலையில்லாமல் போதைக்கு அடிமையாகி, கூலிப்படையாக மாறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்