அமைச்சர் வேலுவின் காலில் கத்தரிக்கோல் காயம்; அபசகுனத்தால் அச்சம்
அரூரில், தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பின் போது, அமைச்சர் வேலுவின் காலில் ரத்த காயம் ஏற்பட்டதன் எதிரொலியாக, நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வராததால், தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி உள்ளது.
கடந்த 9ல், அமைச்சர் வேலு, தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில், கச்சேரிமேட்டில் தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார். ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விட்டு, அருகிலிருந்த நகர செயலர் முல்லைரவியிடம், கத்தரிக்கோலை வேலு வழங்கியபோது, அதை முல்லைரவி தவறவிட்டார். கத்தரிக்கோல் அமைச்சர் வேலுவின் இடது பாதத்தில் விழுந்து, காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் வராததால், தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கத்தரிக்கோலால் ஏற்பட்ட ரத்த காயத்தை தி.மு.க., நிர்வாகிகள் அபசகுனமாக நினைக்கின்றனர். தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்கு மேலாகியும், வேட்பாளர் சண்முகம், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் தேர்தல் அலுவலகத்துக்கு வருவதில்லை.
பெயரளவிற்கு காலையில் திறக்கப்பட்டு பின், மாலையில் நுழைவாயில் இரும்பு கம்பியை கொண்டு தடுக்கப்படுகிறது. கட்சியினர் யாரும் வராததால் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

அடப்பாவமே ராமசாமி நாய்க்கர் வழித்தோன்றல் இப்படியெல்லாம் செய்யலாமா ? "அபசகுனம் " வேடிக்கைதான் .