மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் போலீஸ் ஏட்டுக்கு கத்திக்குத்து!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த ஏட்டு கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் விக்னேஷ்.33. இவர் இன்று(ஏப்.23) தரங்கம்பாடி தாலுகா பொறையார் தனியார் பள்ளியில் உள்ள ஓட்டுப்பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அங்கு வந்த நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் விக்னேஷை சரமாரியாக குத்தி உள்ளார்.
தாக்குதலால் விக்னேஷூக்கு கைகள் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விக்னேஷை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விக்னேஷை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர். பின்னர் பொறையார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் காட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் பிரபாகரன் என்பதும் அவர் மீது ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி ஊடகத்தின் போது போலீசாரை கத்தியால் குத்திய வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டசபை தொகுதி அரகாசனஹள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட எர்ரப்பட்டி கிராமத்தில் தவெக, நிர்வாகிகள் மீது திமுக வினர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் தவெக, நிர்வாகிகள் 3 பேர் காயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்