Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 39 ஆண்டுகளுக்கு பின் பிராமண சமுதாயத்தவருக்கு மந்திரி பதவி

 39 ஆண்டுகளுக்கு பின் பிராமண சமுதாயத்தவருக்கு மந்திரி பதவி

சென்னை: தமிழகத்தில், 39 ஆண்டுகளுக்கு பின், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடரமணன், அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக முதல்வராக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அவர்களில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வென்ற வெங்கடரமணன் ஒருவர்.

கடந்த 1952ல் நடந்த, முதல் சட்டசபை தேர்தலில், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாஜி முதல்வரானார். கடந்த 1954ல் காமராஜர் முதல்வரான போது, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.

அடுத்து, 1967ல் இருந்து தி.மு.க., அரசில் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

கடந்த 1977 முதல் 1987 வரை, எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் பிராமண சமுதா யத்தைச் சேர்ந்த எச்.வி.ஹண்டே, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

கடந்த 1991ல் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயலலிதா முதல்வரானார். ஆனால், அவரது அமைச்சரவையில் பிராமணர்கள் இடம் பெறவில்லை. 1987க்கு பின், அதாவது, 39 ஆண்டுகளுக்கு பின், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசில், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த வெங்கடரமணன் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement