Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'அதிமுகவை யாரும் விலைக்கு வாங்க முடியாது': ராகுலுக்கு இபிஎஸ் பதிலடி

'அதிமுகவை யாரும் விலைக்கு வாங்க முடியாது': ராகுலுக்கு இபிஎஸ் பதிலடி

ஈரோடு: அதிமுகவை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என இபிஎஸ் கூறியுள்ளார்.

ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் இபிஎஸ் பேசியதாவது;சட்டசபைத் தேர்தலை சந்திக்கத் திராணியில்லாமல் மத்திய அரசை ஸ்டாலின் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார். நேற்று ராகுல் பாஜவின் பிடியில் அதிமுக உள்ளது என்று பேசினார். அதிமுக யாருக்கும் அடிமையில்லை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. நாங்கள் மக்கள் விரோத ஆட்சி அகற்றப்படுவதற்கே கூட்டணி அமைத்திருக்கிறோம். எங்களுடைய இயல்பான கூட்டணி.
திமுக கூட்டணியில் ஒரே ஒரு கட்சி, அதுவும் அரை பெர்சன்ட் வாங்கிய கட்சி தான் புதிதாக சேர்ந்திருக்கிறது. ஆனால் வெளியில் பில்டப். பழைய கூட்டணிக் கட்சிகளுக்கு அல்வா கொடுத்துவிட்டார். ஒரு சீட்டைக் குறைத்தார். புதிய அரை பெர்சன்ட் கட்சிக்கு 10 சீட். இரண்டரை பெர்சன்ட் கட்சிக்கு 5 சீட்.
அதிமுக ஆட்சி பற்றி ஸ்டாலினால் எதுவும் பேச முடியாது. அதனால் இபிஎஸ் ஊர்ந்துக்கொண்டு போனார் என்பார், இதையா மக்கள் கேட்டார்கள்? ஸ்டாலின் மாதிரி வெளிநாடு சென்று சைக்கிள் ஓட்டவில்லை. நான் வெளிநாடு போனேன், திட்டங்களைக் கொண்டுவந்தேன். அதிமுக முகமூடியுடன் பாஜ வருகிறது என்கிறார். அப்படி என்றால் 1999ல் திமுக முகமூடியுடன் பாஜ வந்ததா?
ஸ்டாலினும், உதயநிதியும் மோடி மோசமானவர் என்கிறார்கள். உதயநிதியின் தாத்தா கருணாநிதியோ, மோடி நல்லவர் என்று பேட்டி கொடுத்தார். அப்பவே சர்டிபிகேட் கொடுத்துவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுககாரராக மாறிவிட்டார். அவர் காங்கிரஸ் தலைவரா அல்லது திமுக தலைவரா என்ற சந்தேகம் வந்துவிட்டது. காமராஜர் பற்றி திருச்சி சிவா கொச்சையாகப் பேசினார், அதை காங்கிரஸ் கட்சி கண்டித்ததா? இல்லை. காமராஜரை பற்றி ஆர்.எஸ்.பாரதி பேசினார், அப்பவும் கண்டிக்கவில்லை. திமுகவுக்கு அடிமையாகிவிட்டது. ஒரு வார்த்தை கூட மக்கள் பிரச்னையைப் பேசியதில்லை. அப்புறம் எதுக்கு அவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்?
திமுக அமைச்சர் செய்த நகராட்சி துறை ஊழலுக்கு எப்.ஐ.ஆர் பதிவுசெய்ய அமலாக்கத்துறை கடிதம் கொடுத்தது, போடவில்லை. அதிமுக வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்டும் போடவில்லை. அதிமுக ஆட்சியில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement