கார் வாங்க தகுதி இல்லையா? 'குரைக்கும் நாய்' என ஆவேசம்
சென்னையில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அளித்த பேட்டி: சமூக வலைதளங்களில் தே.மு.தி.க., மீது, ஊழல், சொத்துக்குவிப்பு, கள்ளச்சாராய வழக்கு, கனிமவள கொள்ளை என புகார்கள் சொல்ல முடியாததால், இரண்டு விஷயங்களுடன் எங்களை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அதில் ஒன்று பேரம்; மற்றொன்று பெட்டி. எங்கள் கட்சியை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்கின்றனர். இதை நம்ப மக்கள் தயாராக இல்லை.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கார் வாங்கினோம். அந்த காரில் திருப்பதி சென்றோம். அதை இப்போது வாங்கியதாக செய்தி பரப்புகின்றனர். ஒரு கார் வாங்கும் தகுதி கூட, விஜயகாந்த் குடும்பத்திற்கு இல்லையா. கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். அவர் சம்பாதித்ததில், 90 சதவீதம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்தார். அந்த உதவிகளுக்கு பின்னால் இருந்தவள் நான் என்பதை, இந்த உலகம் அறியும்.
விஜயகாந்த் காலத்தில் இருந்தே புகழ்ச்சி, அவமானம், துரோகங்களை நாங்கள் பார்த்துவிட்டோம். எனவே, எங்களை பார்த்து குரைக்கும் நாய்கள் குறித்து நாங்கள் கவலைப்படுவது கிடையாது. உண்மைக்கு புறம்பான செய்திகளை. நாங்கள் கருத்தில் கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்