அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
சென்னை: அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை என்பது, மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.
அது உண்மைதான் என்பதுபோல், அரசியல் கட்சிகளும், கட்சி பதவி, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில், பெண்களுக்கு சரி சமமான வாய்ப்பை வழங்குவதில்லை. பெயரளவுக்கு மட்டும் சில தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக அறிவிக்கின்றனர். அதிலும், கட்சியில் செல்வாக்கு பெற்றவர்களின் மனைவியருக்கு மட்டுமே, இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், பதவிகளில் பங்கு அளிக்க முன் வராத அரசியல்வாதிகள், தங்களின் மனைவி பெயரில் அதிக அளவில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளனர். 






தற்போதைய தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மனைவியரும், கோடீஸ்வரர்களாக உள்ளனர். ஒவ்வொருவர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. நான்கு அமைச்சர்கள் தவிர, முதல்வர் மற்றும் மற்ற அமைச்சர்களின் சொத்துக்கள் மதிப்பு, கடந்த ஐந்தாண்டு களில், பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமைச்சர்களில், அதிக சொத்துக்கள் உள்ளவராக காந்தி உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 112.59 கோடி ரூபாயாக உள்ளது. இது அனைத்தும் அமைச்சர்களின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவை. தற்போதைய அமைச்சர்களில், மனோ தங்கராஜ், கயல்விழி ஆகியோருக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் தவிர மற்ற அமைச்சர்களின் சொத்து விபரங்கள்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்