Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கரையேற 'கரன்சி' முக்கியம்: துரைமுருகனுக்கு பறந்த உத்தரவு

 கரையேற 'கரன்சி' முக்கியம்:  துரைமுருகனுக்கு பறந்த உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வேலுார் மாவட்டம், காட்பாடியில், தி.மு.க., பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார். வயது முதிர்வு காரணமாக, இந்த தேர்தலில் அவருக்கு பதில், அவர் கை காட்டும் நபருக்கு, 'சீட்' வழங்க கட்சி தலைமை முடிவு செய்தது. ஆனால், அவரே போட்டியிட விரும்பியதால், முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. துரைமுருகனும் சிரமப்பட்டு பிரசாரம் செய்கிறார்.

அவரும் எம்.பி.,யாக உள்ள அவரது மகன் கதிர் ஆனந்தும், சொந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கே எதுவும் செய்வதில்லை என்ற புகார் உள்ளது. அதனாலேயே கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 746 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் துரைமுருகன் வென்றார்.

இந்த தேர்தலில் அவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க கட்சி நிர்வாகிகள் முடிவு செய்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், துரைமுருகன் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை 'கவனிக்காமல்' இருப்பதுடன், குறிப்பிட்ட இடங்களில் வசிக்கும் வாக்காளர்களை மட்டும், 'கவனிக்கவும்' திட்டமிட்டுள்ளனர்.

கவனிக்காததற்கு காரணமாக, 'மத்திய முகமை அமைப்புகள் கண்காணிக்கின்றன' என கூறுகின்றனர். இதை தெரிந்து கொண்ட கட்சி தலைமை, 'காட்பாடி தொகுதியில் வெற்றி பெற வேண்டும் எனில், கட்சியினர் முதல் வாக்காளர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி தாரளமாக கவனிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisement