Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மயிலாப்பூரில் சாலைகள் மேம்படுத்தப்படும்: தமிழிசை

 மயிலாப்பூரில் சாலைகள் மேம்படுத்தப்படும்: தமிழிசை

சென்னை: ''மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்,'' என, பா.ஜ., வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.

மயிலாப்பூர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் மயிலாப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது, வாக்காளர்களிடம் அவர் பேசியதாவது:

மயிலாப்பூர் தொகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சில சாலைகள் எல்லாம் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. மாநகராட்சி முறையாக சாலைகளை அமைக்காததால்விபத்துகள் நடந்து வருகின்றன.

கடந்தாண்டில், மந்தைவெளி சந்தை சாலையில் நடந்து சென்ற முதியவர், கால் இடறி கீழே விழுந்தார்.

சாலையில் கிடந்த கல்லில் தலை மோதி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்த செய்தி ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதையடுத்து, ஓரிரு நாட்களிலேயே, புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.

இப்படி உயிரிழப்பிற்குபின்தான் அதிகாரிகள் விழித்துக் கொள்கின்றனர். நான் எம்.எல்.ஏ.,வாக பதவி ஏற்றப்பின், தொகுதி முழுதும் உள்ள சாலைகளை மேம்படுத்தி தருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement