'காய்க்கிற மரம்தான் கல்லடி படும்'; செங்கோட்டையன் தத்துவ பேச்சு
கோபி: ''காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லடி படும்,'' என்று, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பல்வேறு இடங்களில் , பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன்பேசியதாவது: நான் கடந்த, 1972ல் இருந்து அரசியலில் இருக்கிறேன். ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன்.
அ.தி.மு.க., என்ற இயக்கத்தில், 45 ஆண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்தேன். அதற்கு பின் பல்வேறு சோதனை. கடுமையான வேதனைகளை எதிர்கொண்ட பின், த.வெ.க., தலைவர் என்னை தாங்கி பிடித்து, எனக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் இடையியேதான் போட்டி.
கோபியில் இபிஎஸ் என்னை குறிப்பிட்டு பேசியுள்ளார். அடுத்தவர் விமர்சனம் குறித்தெல்லாம் கவலைப்பட்டு அரசியலில் முடங்கிவிட முடியாது. அதனால், அது குறித்து கவலைப்பட எதுவும் இல்லை. ஆனால், இபிஎஸ்யின் விமர்சனங்கள் கடுமையாக இருப்பதாக, என்னிடம் சிலர் குறிப்பிட்டனர்.
மக்கள் என்னை நம்புகின்றனர். அவர்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உயிர் இருக்கும் வரை த.வெ.க.,வுக்காக பாடுபடுவேன். காய்க்கிற மரம் தான் கல்லடி படும். அதற்கேற்ப, இபிஎஸ் விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்