Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'கருணாநிதி குறித்து பேச பழனிசாமிக்கு தகுதியில்லை': ஸ்டாலின் பதிலடி

 'கருணாநிதி குறித்து பேச பழனிசாமிக்கு தகுதியில்லை': ஸ்டாலின் பதிலடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருநெல்வேலி: ''முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேச பழனிசாமிக்கு தகுதியில்லை,'' என திருநெல்வேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருநெல்வேலியில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சுய சிந்தனை இல்லாமல், பழனிசாமி தமிழையும் தமிழகத்தையும் பாதிக்கும் அரசியலை முன்னெடுத்து வருகிறார்.

பத்து தோல்விகளை சந்தித்த அவர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முன்னர் விமர்சித்து, இப்போது பெயர் மாற்றி அறிவிக்கிறார். பொய்களை கூறி ஏமாற்ற முடியாது என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியின் சதி முயற்சிகளை முறியடித்து மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கியுள்ளோம். தி.மு.க., தேர்தல் அறிக்கையே இந்த தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்'; சின்ன குழந்தையும் அதைச் சொல்லும் அளவுக்கு அது மக்களிடம் சென்றுள்ளது.

பல சாதனைகளை செய்து விட்டு, மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறோம். 'டபுள் இன்ஜின்' என பேசுபவர்கள் ஒன்றும் செய்யவில்லை. பண மதிப்பு இழப்பு, கொரோனா கால நடவடிக்கைகள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டனர். காஸ் சிலிண்டர் விலையேற்றத்தால் மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

தேர்தலில் என் செயல்பாடுகளை விமர்சிக்க பழனிசாமிக்கு உரிமை உள்ளது; ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேச தகுதியில்லை. ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி.

அவர் மறைந்தபோது, அண்ணாதுரை நினைவிடம் அருகே அடக்கம் செய்ய வேண்டுமென நான் நேரில் சென்று பழனிசாமியிடம் கேட்டேன்; அப்போது மறுத்தீர்களே. உங்களை நம்பி பதவி கொடுத்தவர்களைத் துரோகம் செய்தவர்கள் நீங்கள்.

ஜெயலலிதா உடல்நிலை குறைவால் சட்டசபைக்கு வர முடியாதபோது, அவருக்கு ஆதரவாக நின்றது தி.மு.க., இதுவே எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம். கருணாநிதியின் கொள்கையை பின்பற்றும் மக்கள் இருக்கும் வரை தி.மு.க.,வை யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement