சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கட்சிப் பதவி; திருமா சமாளிப்பு
நமது நிருபர்
தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ்க்கு கட்சியில் பதவி வழங்கி, விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பாபு ஆகிய 3 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளானது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிலவும் கடுமையான கோஷ்டி பூசலே இதற்கு காரணம் என்றும், கட்சி எம்எல்ஏக்கள் திமுகவுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தங்கள் கட்சி எம்எல்ஏ ஷாநவாஸ், தனக்குத் தெரியாமல் திமுகவுடன் நேரடியாக பேசியதை, உறுதி செய்வது போல், திருமாவளவன் பேட்டி கொடுத்து இருந்தார்.
எனினும், எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கு, மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு, எவ்வித உள்நோக்கமும் இல்லை என திருமா மீண்டும் மீண்டும் கூறி வந்தார். தற்போது சீட் மறுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு கட்சிப் பதவி அவர் வழங்கியுள்ளார்.
எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜிக்கு கட்சியில் மாநில பொருளாளர் பதவியும், எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு மாநில முதன்மைச் செயலாளர் பதவியும் திருமாவளவன் வழங்கி உள்ளார். கோஷ்டி பூசல், அதிருப்தியை சமாளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கையை திரும்ப எடுத்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.
Advertisement
இல்லை என்றால் இவர் இந்த பதவியில் இருக்க முடியாது!
அப்போ இந்த தேர்தலில் தோல்வி அடையப்போகும் வேட்பாளர்களுக்கு என்ன மாதிரியான பதவி கொடுக்க போறாரோ தெரியல. புகையை பஞ்சை போட்டு எவ்வளவு நாட்களுக்கு மூடி வைப்பாரோ இந்த திருமா. உடைவது கட்சி...உடைப்பது திமுக
ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும்.... பூசாத மாதிரியும் இருக்கனும்.... இது தான் பாலிசி.
திருமா சமாளிப்ஸ் எதுக்கு? நாவாஸ்க்கு பதவி குடுத்தா திருட்டு திமுக பக்கமே திரும்பி பார்க்க மாட்டாரா? இன்னா இது புது கதையா இருக்கு?
0/8 . உன் கட்சி ஊத்திக்கிச்சு . இதில் கட்சி பதவி எதுக்கு . அவங்க வேற கட்சிக்கு போறாங்க .
தேர்தல் முடிவுகளுக்கு பின் இது போன்ற கட்சிகள் காணாம போய்டணும் .சீமான் ,அன்புமணி, திருமா ,திராவிட கழகங்கள் இருக்காது.
திருமாவின் நாடக அரசியல் இனி எடுபடாது. அதனால் எல்லோருக்கும் பதவியை அள்ளி கொடுங்கள். திருமா ஆரியத்திடம்தான் அடிமையாக இருக்க மாட்டார். ஆனால், திராவிட அடிமை என்றால் அவருக்கு ஓகே. எப்படி பார்த்தாலும் அடிமைதான் என்பது புரிந்தும் தெரிந்தும் தனது சுயநலனுக்காக ஆதி தமிழர்களை அடகுவைத்து தரகு செய்கிறார் இந்த அடிமை.

இவர் இன்னும் இருக்கிறாரா ???????