Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மக்கள் எளிதாக என்னை அணுகலாம் பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி

 மக்கள் எளிதாக என்னை அணுகலாம் பா.ஜ. வேட்பாளர் தங்கராஜ் உறுதி

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் எளிதாக அணுகி தங்களின் கோரிக்கைகளை தெரியப்படுத்தலாம் என்று பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜ் கூட்டணி கட்சியினருடன் சென்று, அனைத்து தரப்பு மக்கள், தொழில்துறை உள்ளிட்டோரை சந்தித்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். செல்லும் இடங்களில் மக்கள் பலத்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

நேற்று காலை, அணைப் பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பிரசா ரத்தை துவக்கினார். வேட்பாளரை வரவேற்ற மக்கள், அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, இந்திரா நகர், குமரப்பபுரம் காலனி, எஸ்.பி.ஐ. காலனி, கல்லாங்காடு வீதி, டி.எம்.சி. காலனி, சூசையாபுரம், மிலிட்டரி காலனி, ராயபுரம் உள்ளிட்ட பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் விசாலாட்சி, பா.ஜ. மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.

செரங்காட்டில் உள்ள பள்ளி வாசலில் இஸ்லாமியர்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, வேட்பாளரை வரவேற்று, தங்கள் கோரிக்கை குறித்து கூறினர்.

தங்கராஜ் பேசுகையில், ''மத்தியில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தங்கள் பகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள பணிகளை முடித்து கொடுப்பது, உங்கள் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் என்னை நேரில் அணுகி தெரியப்படுத்தலாம்.

மக்களின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன். குடிநீர், ரோடு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும்,'' என்று பேசினார்.

முன்னதாக, ஓட்டு சேகரிக்க சென்ற இடங்களில், மக்கள் நீண்ட காலம் தங்கள் பகுதியில் உள்ள வார்டு பிரச்னைகளை வேட்பாளரிடம் தெரியப்படுத்தி, அதற்கு தீர்வுகாண வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement