மேலுார் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த கோரி மனு
சென்னை: மேலுார் தொகுதி சுயேச்சை வேட்பாளர் முருகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான், மேலுார் தொகுதியில் 'கம்ப்யூட்டர்' சின்னத்தில், விவசாயிகள் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டேன்.
அ.தி.மு.க., வேட்பாளர் பெரியபுள்ளான், காங்., வேட்பாளர் விஸ்வநாதன் ஆகியோர், ஓட்டுக்கு 1,000 முதல் 3,000 ரூபாய் வரை பணப்பட்டுவாடா செய்தனர்.
தேர்தல் விதிகளை மீறி, இருவரும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் பணப்பட்டுவாடா செய்த நாட்களில், வாகன தணிக்கை சோதனையும் நடக்கவில்லை.
தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். என் புகார் மனுக்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி, ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை.
எனவே, மேலுார் தொகுதி ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். உரிய விசாரணை நடத்தி, தேர்தலை ரத்து செய்து, மறுதேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்