Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பிரசார விதிமீறல் புகார்; விஜய் மீது போலீஸ் வழக்கு

பிரசார விதிமீறல் புகார்; விஜய் மீது போலீஸ் வழக்கு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது சிறப்பு நிருபர்

சென்னையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, விஜய் பிரசாரம் செய்ததாக கூறி, கொளத்துார் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குமார், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

விஜய் மற்றும் அவரை காண வந்த 3,000 பேர், பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் தடையாக நின்றனர். பொது மக்கள், தொண்டர்கள் என, 5,000 பேர் கூடி, 30 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி, 'ரோடு ஷோ' நடத்தி, போக்கு வரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.

ஆனால், 300 பேர் மட்டுமே கூடி, மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை பிரசாரம் செய்யவே அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதை மீறி, மாலை 3:40 மணிக்கு முன்னதாகவே சாலையில் கூடி அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்திய விஜய் மற்றும் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், விஜய் உள்ளிட்ட த.வெ.க., நிர்வாகிகள் மீது, பெரவள்ளூர் போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வந்தபோது, ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே போக்குவரத்தை மாற்றம் செய்த போலீசார், அதே இடத்திற்கு விஜய் வந்தபோது, எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஏப் 01, 2026 12:40 pm

தமிழகத்தில் தவெக பாஜக வளர்ச்சியை முடக்கும் என்ற பயத்தில் தேர்தல் ஆணைய துணையுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.

Reply Rate this
ஏப் 01, 2026 10:08 am

நேற்று இரவு த வெ க கட்சி கூட்டம் வில்லிவாக்கம் ல நடந்துருக்கு. அங்க பொம்பளைங்க மேல கண்ணாடி பாட்டில் ஒடச்சி அடிச்சிருக்காய்ங்க திமுக ரவுடிகள். சோசியல் மீடியா பூரா அதான் viral நியூஸ்.

Reply Rate this
ஏப் 01, 2026 09:58 am

விஜய் மீது வழக்கு பதிந்து முடிஞ்சா அவரை கைது பண்ணி ஜெயில்ல போடுங்க. அப்பறம் தெரியும் மக்கள் யார் பக்கம் நிக்கிறாங்கன்னு.

Reply Rate this
ஏப் 01, 2026 09:56 am

ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி கரிச்மா கொண்ட தலைவர்கள் அல்ல.
அவர்களுக்காக மக்கள் இந்த வெயிலில் ஒரு நாள் சம்பளத்தை விட்டுவிட்டு வந்து நிற்க மாட்டார்கள்.

பணம், மதுபானம், பிரியாணி கொடுத்து தான் கூட்டத்தை சேர்க்கிறார்கள் — இது உண்மையா இல்லையா?

ஆனால் விஜய்க்கு அப்படியா? மக்கள் அவருக்காக தாங்களாகவே வருகிறார்கள். பெண்களும் முதியவர்களும் வர வேண்டாம் என்று கூட விஜய் சொல்கிறார்.

இன்றைய தமிழ்நாட்டில், இப்படி ஒரு கூட்டத்தை ஈர்க்கும் அளவிற்கு எந்த தலைவர் இருக்கிறார்?

மக்கள் காலை முதல் மாலை வரை இந்த கடும் வெயிலில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஒரு நாள் சம்பளத்தை இழந்தும் விஜய்க்காக வந்திருக்கிறார்கள். அது நடிகரை பார்க்க வரும் கூட்டமாம்.. வாக்காக மாறாதாம். செம்ம காமெடி.

இன்னும் நீங்கள் களநிலவர நிலை உண்மையை புரிந்து கொள்ளவில்லை.

Reply Rate this
ஏப் 01, 2026 09:24 am

விஜயை கண்டு இந்த அரசு நடுங்குகிறது

Reply Rate this
ஏப் 01, 2026 08:44 am

விஜய் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அதிகம்தான் வருகின்றது இதைப்பார்த்து அதிர்ச்சியில் திராவிட மாடல் அரசு செய்வதெரியாமல் திகைக்கின்றனர் அவர்கள் என்ன செய்தாலும் பணம் சாப்பாடு இலவச பொருட்கள் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு கூடுவது இல்லை ஆனால் ஒன்றுமே கொடுக்காத விஜய்க்கு அவர்மீது உள்ள அன்பு பாசத்தால் மக்கள் ஈர்க்கப்பட்டு திரளாக வருகின்றனர் இதை
யவராவலும் எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது மாற்றவும் முடியாது அங்கே வரும் கூட்டத்திற்கு
ஏற்ப பாதுகாப்பு செய்ய வேண்டிய கடமை போலீசுக்கு உள்ளது அதைவிட்டுவிட்டு எவ்வளவுபேர் கூட்டம் கூடுவார்கள் என்று கேட்பது முட்டள் தனம் போலீசிடம் ரகசிய கண்காணிப்பு மூலம் இவைகளை முன்கூட்டியே அறிய வேண்டாமா அதை தவற விட்டுவிட்டு விஜய்யை குறை சொல்வது கடப்படாதனம் இது திராவிட மாடல் அரசின் தூண்டுதலின் பேரில்தான் நடந்த வருகிறது தேர்தல் ஆணையம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போலீசின் உளவுத்துறையின் பித்தலாட்டம் இது

Reply Rate this
ஏப் 01, 2026 08:24 am

திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் காவல் துறை ஏவல்துறையாக உள்ளது.விஜய் போன்ற ப்ரபலம் வரும் போது எப்படி வெறும் 300 பேரை எதிர்பார்க்க முடியும்?

Reply Rate this
ஏப் 01, 2026 07:58 am

இதேபோல் ஸ்டாலின் பிரச்சாரத்திலும் நடவடிக்கை எடுப்பார்களா. காவல்துறை ஏன் இவ்வளவு தாழ்ந்து விட்டது.

Reply Rate this