Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கோவை வடக்கு, மொடக்குறிச்சி தொகுதிகள்; அண்ணாமலைக்காக ரிசர்வ் செய்தது பாஜ

கோவை வடக்கு, மொடக்குறிச்சி தொகுதிகள்; அண்ணாமலைக்காக ரிசர்வ் செய்தது பாஜ
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை களம் இறங்குவார் என்று பாஜ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபை தேர்தலில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று தேசிய தலைமை விரும்புவதாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வின்போது அண்ணாமலையை சந்தித்த கோயல் இவ்வாறு தெரிவித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட தயார் என்று தெரிவித்துள்ளார். அதன்படி அவர், கோவை வடக்கு தொகுதியில் களம் இறங்க வாய்ப்புள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
எனினும், மத்திய தேர்தல் குழு உறுப்பினர் வானதி சீனிவாசன், தனக்கு கோவை வடக்கு வேண்டும் என்று அடம் பிடித்தால், அண்ணாமலைக்கு மொடக்குறிச்சி தொகுதி தரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அண்ணாமலை தேர்தல் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது.

Advertisement