Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விவசாயிகளுக்கு பம்பு செட் : 'அள்ளி விட்ட' ஸ்டாலின்

விவசாயிகளுக்கு பம்பு செட் : 'அள்ளி விட்ட' ஸ்டாலின்

தி.மு.க., தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், 51 துறைகளில் 498 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அவற்றின் விபரம்:

* வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், டி.வி., பிரிட்ஜ், வாசிங் மிஷின், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன், மின் அடுப்புகள் வாங்க, 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இதை பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை மாற்றிக் கொள்ளலாம்
* மத்திய, மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட, நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அறிக்கையை, நாடு முழுதும் விவாதப் பொருளாக்கி, மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்ட, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்
* சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்
* கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 10 கோடி ரூபாயில் மொழி போராட்ட வரலாற்று காட்சிக் கூடம் அமைக்கப்படும்
* மகளிர் உரிமைத் தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்
* சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு, ஆண்டுதோறும் முதல்வர் விருது வழங்கப்படும்
* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும்
* இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத, நவீன மின்சார பம்புசெட்டுகள் வழங்கப்படும்
* நெல் கொள்முதல் விலை, குவிண்டாலுக்கு 3,500 ரூபாய், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு 4,500 ரூபாய் வழங்கப்படும்
* மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில், 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்
* உணவு உற்பத்தி 125 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும்
* 5,000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 100 சூரிய சக்தி உலர்த்திகள், 1000 சூரியசக்தி மின்வேலிகள் அமைக்கப்படும்
* கிராமங்களில் உழவர் சந்தைகள் போல, நகரங்களில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும்
* தமிழகத்தில் உற்பத்தியாகும் பனைப் பொருட்களை, ஆவின் விற்பனை நிலையங்கள் வழியாக விற்க ஏற்பாடு செய்யப்படும்
* அடுத்த 30 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவை, வேளாண்மை, தொழிற்சாலை தேவைகளை நிறைவேற்ற, தமிழ்நாடு நீர்ப்பாதுகாப்பு செயல் திட்டம் 2056 உருவாக்கப்படும்
* புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் 1,000 ரூபாய், 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
* 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே நிதிக்குழு பரிந்துரை செய்ய வேண்டும்
* மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வலியுறுத்துவோம்
* ஜி.எஸ்.டி., வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 50லிருந்து 70 சதவீதமாக உயர்த்த வலியுறுத்துவோம்
* தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்
* முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான வரம்பு 5 லட்சம் ரூபாயாகவும் காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
* அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்படும்
* 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினிகள் வழங்கப்படும்
* குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர போக்சோ நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்கப்படும்
* முதியோர் உதவித் தொகை 1,200 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்
* மாற்றித் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு மானியத் தொகை 2,000 ரூபாயிலிருந்து, 4,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்
* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்
* சிறுபான்மை பள்ளிகளில் காலியாக உள்ள அரபி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
* முஸ்லிம் பெண்களின் கல்வியை ஊக்குவிக்க வக்பு வாரியம் வாயிலாக கூடுதல் கல்லுாரிகள் திறக்கப்படும்
* உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகை 5,000 ரூபாயிலிருந்து 8,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்
* 1000 குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும்
* ஆட்டோ வாங்க 1.5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்
* அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்
* 90 சதவீத மானியத்துடன் 10,000 கைத்தறிகள் நவீனப்படுத்தப்படும்
* 1,000 மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்.
* 5 லட்சம் மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உதவித் தொகையுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்
* ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்படும்
* தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
* தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்த 'புராக்டட் ஆப் தமிழ்நாடு' வர்த்தக குறியீட்டை உருவாக்குவோம்.
* கடலோரப் பகுதிகளில் நீல பொருளாதார பூங்காக்கள் அமைக்கப்படும்
* அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படும்
* பழமை வாய்ந்த கோவில்களை புதுப்பிக்க ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் வழங்கப்படும்
* கைக் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் எளிதில் தரிசனம் செய்ய கோவில்களில் தனி வரிசை ஏற்படுத்தப்படும்
* சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய்
* மாவட்டம் தோறும் செஸ் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
* விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
* கால்நடைகளைப் பராமரிக்க வழங்கப்படும் கடன் 5,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்றப்படும்
* பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்
* மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை 8,000 ரூபாயிலிருந்து, 10,000 ரூபாயாகவும், மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை 6,000 ரூபாயிருந்து 9,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.
* 2030க்குள் அனைத்து நகர்ப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்
* பல்வேறு திட்டங்களின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்
* அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா உருவாக்கப்படும்
* 18 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
* தமிழ்நாட்டின் ஏற்றுமதியை 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை
* தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
* சிறுபான்மையினருக்கான தொழில் கடன் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்
* 10,000 கோடி ரூபாயில் கிராம சாலைகள் சீரமைக்கப்படும்
* மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள் உருவாக்கப்படும்
* திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்
* அடுத்த ஐந்தாண்டுகளில் 10,000 புதிய பஸ்கள் இயக்கப்படும்
* பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ருபாயாக உயர்த்தப்படும்
* மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள் செய்யப்படும்
* தமிழகத்தில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்
* ஊரகப்பகுதிகளில் 10,000 புத்தொழில்கள் துவங்கப்படும்
* மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்
* அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் டிஜிட்டல் கற்றல் மையங்கள்
* அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள்
* வட மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு வளர்ச்சி திட்டங்கள்
* மேற்கு மாவட்டங்களில் தொழில் புரட்சியை உறுதி செய்ய புதிய திட்டம்
* தென் மாவட்டங்களிலும் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள்
* 20,000 கோடி ரூபாயில் மண்டல வாரியாக சிறப்பு திட்டங்கள்.

Advertisement