Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 எகிறும் உத்தேச ஓட்டு: கட்சியினர் திகைப்பு

 எகிறும் உத்தேச ஓட்டு: கட்சியினர் திகைப்பு

சட்டசபை, லோக்சபா தேர்தல் கால பணி, தற்போது இடைத்தேர்தல் போல் 'மைக்ரோ லெவல்' பணியாக மாறிவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சில வாரங்களாக தி.மு.க., - - அ.தி.மு.க., கட்சிகளில் பூத் அளவில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பெயர், அலைபேசி எண் விபரங்களுடன் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவர் என்ற விபரங்களை சேகரித்து, உத்தேச ஓட்டு கணக்கை பதிவு செய்கின்றனர். வாக்காளர்களை கடைசி நேரத்தில் கவனிக்கும் நோக்கிலும் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தி.மு.க.,வினர் விபரம் சேகரிக்கும் போது, மாற்று கட்சி அடையாளத்துடன் இருப்போரும் தி.மு.க.,வுக்கு ஓட்டு என கூறுகின்றனர். வேறு கட்சி என தெரிவித்தால், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்பதால் இவ்வாறு சொல்கின்றனர் என்பதை தெரிந்து கொண்ட தி.மு.க.,வினர், உத்தேச பட்டியலில் அதிக ஓட்டுகள் தெரிவித்து ஓட்டு மிஷினில் குறைந்தால், கட்சியில் சச்சரவுகள் வருமே என புலம்புகின்றனர்.

Advertisement