ஸ்டாலின் பெயரை சொல்ல மறந்த ராகுல்
- நமது நிருபர் -:
பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய, 3 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி முன்னாள் தலைவர் ராகுல் நேற்று பிரசாரம் செய்தார். இதில், பொன்னேரி பிரசாரத்தில், முதல்வர் ஸ்டாலின் பெயரை ராகுல் உச்சரிக்கவில்லை.
கடந்த 6ம் தேதி புதுச்சேரியில் நடந்த பிரசாரக் கூட்டத்திலும், இருவரும் ஒன்றாக மேடை ஏறவில்லை. அங்கு ராகுல் பேசுகையிலும், ஸ்டாலின் பெயரை குறிப்பிடவில்லை.தற்போது, பொன்னேரியிலும் உச்சரிக்கவில்லை.
அதையடுத்து, சோளிங்கரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பெயரை ராகுல் உச்சரித்தார். அதாவது, ''பிரதமர் மோடியால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கட்டுப்படுத்த முடியும். ஆனால், ஸ்டாலினை கட்டுப்படுத்த முடியாது,'' என்றார்.
நாளை மீண்டும் ராகுல் தமிழகம் வருகிறார். தென் மாவட்டங்களில், ஒரு நாள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போதாவது, முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் சேர்ந்து பிரசாரம் செய்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement

அடுத்த தேர்தலில் காங்கிரஸ்க்கு சீட்டு ஒதுக்கீடு நடக்கும் ஆனால் திமுக போடும் நிபந்தனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிலை வந்து விடுமோ என்ற கவலை ராகுல்காந்திக்கு வந்து இருக்கலாம்.