Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்

நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த சீமான்: காரைக்குடியில் கடைசி கட்ட பிரசாரம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

காரைக்குடி: காரைக்குடியில் நடைபயிற்சியின் போது மக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு சேகரித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது. இதனால் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

காலை நேரத்தில் நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரிப்பதை முதல்வர் ஸ்டாலின் வழக்கமாக மேற்கொண்டார். அதுமட்டுமின்றி சாலையோர கடைகளில் அமர்ந்து டீ சாப்பிட்டு ஓட்டு சேகரித்தார்.

அதே பாணியில், இன்று (ஏப்.19) அதிகாலைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி தொகுதி வேட்பாளருமான சீமான், காரைக்குடி பஸ் நிலையத்தில் நடைபயிற்சி மேற்கொண்டபடியே மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

பொதுமக்களை சந்தித்து பேசிய அவர், மாற்று அரசியலுக்காக தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது சீமான் கூறுகையில், ''நிர்வாகத்தில் நிறைய ஊழல் ஆட்சி இருக்கிறது. அதனை ஒழிக்க வேண்டும்; ஒரு மாற்றம் வர வேண்டும்'' என்றார்.

Advertisement

ஏப் 19, 2026 02:22 pm

சீமான் வெற்றி

Reply Rate this
ஏப் 19, 2026 12:57 pm

கிறிஸ்துவ வோட்டு விஜய்யின் வருகையால் பலவகையில பிரிக்கப்படும்.

Reply Rate this
ஏப் 19, 2026 12:36 pm

சைமன் நேரத்தை விணடிக்கிறாப்ளே......waste of time

Reply Rate this

இந்த முறை சீமாண்டியின் தோல்வி படு கேவலமாக இருக்கும். அதிக அளவில் கிறுத்தவ தும்பிகள் கிறுத்தவ கட்சிக்கு ஓடிவிட்டனர்.

Reply Rate this
ஏப் 19, 2026 11:42 am

உங்க்க நண்பர் ஜோசப்பை விஜய பாருங்க. கூடா சேர்ந்திருந்தீர்களேன்றால் காமடி நல்ல ருந்திருக்கும்

Reply Rate this

நாம் தமிழரின் வெற்றி நிச்சயம் சீமான் அவர்களே. அனைத்து உயிர்களுக்குமான அரசியல் வெல்லட்டும்.

Reply Rate this
ஏப் 19, 2026 09:34 am

சீமான் தேர்தலுக்கு பிறகு இன்னொரு வைகோ ஆகி விடுவார்

Reply Rate this