கண்டுகொள்ள மறுக்கும் ராகுல்; வருத்தத்தில் இருக்கும் சிதம்பரம்
சென்னை: தி.மு.க.,வுடனான கூட்டணியை உறுதிப்படுத் திய தன்னை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கண்டுகொள்ளவில்லை என, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அதிருப்தியில் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
காங்., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கடந்த 2004 லோக்சபா தேர்தலில் இருந்து, தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. ஆனாலும், இந்த சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க ராகுல் விரும்பியதால், இந்த உறவில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், ஆட்சியில் பங்கு, 41 தொகுதிகள் என நிபந்தனைகளை விதித்தது காங்கிரஸ். இவற்றை முன்வைத்து, காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், தேசிய தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி., உள்ளிட்டோர் வெளிப்படையாகவே பேசினர்; சமூக வலை தளங்களிலும் பதிவிட்டனர்.
இந்த சூழலில், முன்னாள் மத்திய அமைச்சரான சிதம்பரம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, காங்., முன்னாள் தலைவர் சோனியா, இந்நாள் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் நேரடியாக பேசி, தி.மு.க., வுடனான கூட்டணியை உறுதி செய்தார்.
இதற்காக, முதல்வர் ஸ்டாலினை மூன்று முறை சிதம்பரம் தனியாக சந்தித்தார். ராகுலின் விருப்பத்துக்கு மாறாக, தி.மு.க.,வுடனான காங்.,கின் கூட்டணி தொடர, அவர் முக்கிய காரணியாக திகழ்கிறார்.
கடந்த 15, 20 ஆகிய தேதிகளில் பொன்னேரி, சோளிங்கர், துறையூர், ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல் ஆகிய தொகுதிகளில் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் தன்னை அழைத்து பேசுவார் என சிதம்பரம் எதிர்பார்த்துள்ளார். ஆனால், ராகுலிடம் இருந்தோ, அவரது தரப்பில் இருந்தோ , சிதம்பரத்திற்கு எந்த அழைப்பும் வரவில்லை.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக போட்டியிடுவதாலும், தேர்தல் களத்தில் விஜயின் த.வெ.க., புதிதாக குதித்திருப்பதாலும், சிதம்பரத்தின் சொந்த ஊரான காரைக்குடி தொகுதியில், வலுவான நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால், ராகுலை அங்கு பிரசாரத்திற்கு அழைத்து வர, சிதம்பரம் முயன்றும் அது நடக்கவில்லை.
ராகுலின் இந்த அணுகுமுறையால் அதிருப்தி அடைந்துள்ள சிதம்பரம், தன் வருத்தத்தை கார்கேவிடம் பகிர்ந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
உங்க காரைக்குடி அலுவகத்தில் பல லட்சங்கள் பிடிபட்டது. யார் பணம் யார் பதுக்கியது.
காங்கிரஸ் இல் இவரையும் இவரது கூட்டாளிகளையும் எந்த காலத்திலும் யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் . தி மு க தலைவர்கள் கொடுக்கும் சப்போர்டினால் பிழைப்பினை ஒட்டிக்கொண்டு இருக்கிறார் என்றும் பலர் பேசிக்கொள்கிறார்கள்
சிதம்பரம் அவரர்களே ராகுல் நல்லவேளை வரவில்லை என்று நினையுங்கள் . வந்து இருந்தால் விழா போகும் ஓட்டும் காணாமல் போய் விடும் .தமிழ் நாட்டில் பப்புவை நம்ப யாரும் தயார் இல்லை
எங்க தெரு கோடியில ஒரு பிரிண்ட் அடிக்கிற மிஷன் விழுந்து கிட்கிறது. சிதம்பரம் அதை வித்துத்தருவாரா
நான்,
என் குடும்பம் மட்டுமே
நலமுடன் வளமுடன் எப்போதும் எப்படியும் வாழ வேண்டும்
என நினைக்கும் பொதுநல சே(வ)கரோ ? என மக்கள் பேசுவார்கள்
சோனியா காங்கிரஸ் 2029 ல் இருக்காது.,.தலிவரு பேசாமல் இருப்பதே நல்லது. கையிலே இருக்கும் கோடிகளை வைத்து வீட்டில் இருக்கவும்.

தான் மட்டுமே இன்றி அந்தக் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்தாலும் பப்புவுக்கு நன்றி இல்லை