எந்த தியாகமும் செய்ய தயார்: பழனிசாமி அறிவிப்பு
சென்னை: ஆறு அமைச்சர்கள், 10 வாரிய தலைவர் பதவிகளுக்காக, சில முன்னாள் அமைச்சர்கள், அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்வதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், வெற்றி பெற்ற சில முன்னாள் அமைச்சர்கள், ஆளும் கட்சியுடன் இணைந்தால், ஆறு அமைச்சர்கள், 10 வாரிய தலைவர் பதவிகள் கொடுக்கப்படும் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி, கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவிற்கு மாறாக, அரசின், நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். இது, அ.தி.மு.க.,வுக்கு அவர்கள் செய்த மாபெரும் துரோகம்.
அப்படி கட்சிக்கு துரோகம் செய்தவர்கள், என் மீது பல்வேறு அவதுாறுகளை சுமத்தி வருகின்றனர். இது, வேதனை அளிக்கிறது. அமைச்சர், வாரிய பதவிகளுக்காக, சுயநலத்துடன் செயல்படும், ஒரு சில முன்னாள் அமைச்சர்களிடம், அனைத்து நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நுாற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க., மக்களுக்காக இயங்கும் என சூளுரைத்த, ஜெயலலிதாவின் நம்பிக்கையை மெய்ப்பிக்க, எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.
அ.தி.மு.க., இப்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு, மீண்டும் ஆட்சி அமைக்க அரும் பணியாற்றுவோம். கட்சி மேலும் வலுப்பெற, அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
Advertisement
11 தோல்விக்கு பொறுப்பேற்று... பதவி விலகினால் போதும்.... வேறு எந்த தியாகமும் செய்ய வேண்டாம்.
Sacrifice the post of General Secretary and order fresh elections with voting by all party members as foreseen by MGR.
Let the party members decide who the General Secretary should be.
You have failed to win in a election that was for the taking - Massive anti-incumbency against DMK, but still people did not see you and ADMK as an native.
They chose a political novice Vijay over you. Serious time for introspection in ADMK and course correction if the party has to survive now.
அம்மாவுக்குப்பின் அதிமுக அரோகரா வெட்கக்கேடு . சரியான தலைவர் இல்லை முன் நடத்த.
அம்மாவுக்குப்பின் அதிமுக அரோகரா வெட்கக்கேடு . சரியான தலைவர் இல்லை முன் நடத்த.
இவர் அ இ அ தி மு கவை அழித்துவிட்டார் எம்ஜியாருக்குப் பிறகு "அனைத்திந்திய" என்பது விடுபட்டுப் போயிற்று. "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்றுதான் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. இப்போது அதுவும் போயிற்றோ? முன்பே விஜய் துணை முதல்வர் பதவி 80 சட்ட மன்றத் தொகுதி என்று கேட்ட போதே இந்தத் தியாகத்தைச் செய்திருந்தால் இன்னேரம் ஆட்சியில் அமர்ந்திருக்கலாமே பாஜகவுடன் கூட்டு சேராமலிருந்தால் எதிர்க்கட்சியாகவாவது அமர்ந்திருக்கலாமே இவர்கள் அரசியலிருந்தே ஒதுக்கப்பட வேண்டியவர்கள்
Yesterday waited. With dmk to C.M fails to lead now blaming others really a or oil
விட்டுக்கொடுப்போர் கெட்டு போவதில்லை , தேர்தலுக்கு முன் இரு கட்சிகளிடமும் கூட்டணி கட்சிகள்
என்ன கேட்டன ஆட்சியில் பங்கு இதன் நடைமுறை யாதார்த்தை உணராமல் செயல்பட்டன ,அன்று விட்டு கொடுத்து இருந்தால் இரு கூட்டணியும் இன்னும் 5 % கூடுதல் வாக்குகள் வாங்கி ரிசல்ட் வேறு மாதிரி வந்து இருக்கும் இப்ப ஆட்சியில் பங்கு இல்லை என்றாலும் வெளியில் இருந்து ஆதரிக்கும் அவல நிலை என்ன கொடுமை சரவணன் இது .........

தாங்கள் அரசியலை விட்டு விலகினால் அதுவே பெரிய தியாகம்