Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அ.தி.மு.க., விவகாரம்: பா.ஜ.,வினருக்கு மேலிடம் தடை

அ.தி.மு.க., விவகாரம்: பா.ஜ.,வினருக்கு மேலிடம் தடை

சென்னை: 'அ.தி.மு.க., விவகாரம் தொடர்பாக, கருத்து தெரிவிக்கக் கூடாது' என, தமிழக பா.ஜ.,வினருக்கு, அக்கட்சி மேலிடம் தடை விதித்துள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்து, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகளிடம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் கேட்டறிந்தார்.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி, வேலுமணி என, இரு குழுக்களாக செயல்படுவது குறித்தும் அவர்களின் விவகாரம் குறித்தும் பா.ஜ., நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement