Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஸ்ரீபெரும்புதுார் தொகுதி நம்பிக்கை மீண்டும் நிஜமானது

 ஸ்ரீபெரும்புதுார் தொகுதி நம்பிக்கை மீண்டும் நிஜமானது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

குன்றத்துார்: ஸ்ரீபெரும்புதுாரில் வெற்றி பெறும் கட்சியினரே ஆட்சி அமைப்பர் என்ற நம்பிக்கையை, அத்தொகுதி மீண்டும் நிஜமாக்கியுள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் தனி சட்டசபை தொகுதியில், எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை, பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.

இதனால், இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி காங்., செல்வப்பெருந்தகை மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் பழனி ஆகியோர், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் வெற்றி பெற, பணத்தை வாரி இரைத்து செலவு செய்து பிரசாரம் செய்தனர்.

இந்நிலையில், ஸ்ரீபெரும் புதுார் தொகுதியில் த.வெ.க., சார்பில் போட்டியிட்ட தென்னரசு, எந்தவித ஆரவாரமின்றி நடிகர் விஜயின் ஆதரவு அலையால், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை தோல்வியடைய செய்து, தென்னரசு வென்றது ஸ்ரீபெரும்புதுார் தொகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளை, ஸ்ரீபெரும்புதுாரில் வெற்றி பெறும் கட்சியே, தமிழகத்தில் ஆட்சியை அமைப்பர் என்ற நம்பிக்கையை, அத்தொகுதி மீண்டும் நிஜமாக்கியுள்ளது என, மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

Advertisement

மே 05, 2026 07:03 am

what happened to Vedasandur theory ? !

Reply Rate this