Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் அறிவிப்பு

 ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் அறிவிப்பு

சென்னை: தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, நாளை திருவள்ளூரில் ஐந்தாம் கட்ட பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார்.

முதல்வர் ஸ்டாலின் ஏப்., 2 முதல் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். ஒரு நாளைக்கு, இரண்டு இடங்களில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, ஓட்டு சேகரித்து வருகிறார்.

நாளை தன் ஐந்தாம் கட்ட பிரசாரத்தை திருவள்ளூரில் தொடங்குகிறார். மாலை 5:00 மணிக்கு திருவள்ளூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவு 7:00 மணிக்கு ராணிப்பேட்டையில் பேசுகிறார்.

வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு வேலுார், இரவு 7:00 மணிக்கு திருப்பத்துார்; 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு தர்மபுரி, இரவு 7:00 மணிக்கு சேலம் சீலநாயக்கன்பட்டி; 16ம் தேதி நாமக்கல் மற்றும் பெரம்பலுார் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

Advertisement