Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 சைக்கிள் ஓட்டவே காரைக்குடி சென்ற விஜய்

 சைக்கிள் ஓட்டவே காரைக்குடி சென்ற விஜய்

காரைக்குடியில் விஜயின் செயல் பாடு வேடிக்கையாக இருந்தது. சைக்கிள் ஓட்டுவதற்காகத்தான் அவர், காரைக்குடிக்கு சென்றிருக்கிறார்.

தி.மு.க.,வை விரட்டுவதற்காக அவர் அரசியலுக்கு வந்திருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அப்படி இல்லை. தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே ஜோசப் விஜய், கட்சி துவங்கி இருக்கிறார்.

முதலில் நடிகர் விஜய், ஒரு அரசியல் தலைவராக இருப்பதைக் காட்டிலும், நல்ல குடும்பஸ்தனாக, நல்ல கணவனாக இருக்க வேண்டும். மக்களுக்கு உதவ வேண்டும். 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் தி.மு.க., அங்கம் வகித்தது.

அப்போது ஹிந்தி வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் நாடகம் போடுகின்றனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.

- நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement