ஸ்டாலின் 10 முறை போட்டி; 3 முறை தோல்வி!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை 10 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அதில் 3வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.
திமுக கட்சி தலைவராக இருந்த கருணாநிதி, தான் போட்டியிட்ட 13 தேர்தலிலும் (1957 முதல் 2018) வரை தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 61 ஆண்டுகள் எம்எல்ஏ.,வாக இருந்து சாதித்துள்ளார்.
அவரின் மகனான ஸ்டாலின், தற்போது நடந்த சட்டசபை தேர்தலையும் சேர்த்து மொத்தம் 10 முறை போட்டியிட்டுள்ளார். அதில் ஆறு முறை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், நான்கு முறை கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.
1984ல் தான் சந்தித்த முதல் தேர்தலில் 2,292 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசுவாமியிடம் தோல்வியை சந்தித்தார். அடுத்து 1989ல் 20,634 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். அப்போது அதிமுக இரண்டாக பிரிந்த நிலையில், அதிமுக (ஜெயலலிதா அணி) வேட்பாளரை வீழ்த்தி வென்றிருந்தார்.
அடுத்து அதிமுக ஒருங்கிணைந்த பின்னர், 1991 தேர்தலில் மீண்டும் அதிமுக வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசுவாமியிடம் 16,981 வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அடுத்து தொடர்ந்து 3 முறை அதே தொகுதியில் வென்றிருந்தார் ஸ்டாலின்.
2011 சட்டசபை தேர்தல் முதல் கொளத்தூர் தொகுதிக்கு மாறிய ஸ்டாலின், அங்கும் தொடர்ந்து 3 முறை வென்று தன் தகுதியை நிரூபித்தார். ஆனால், தற்போது முடிந்த சட்டசபை தேர்தலில் அதே கொளத்தூரில் புதிதாக களமிறங்கிய த.வெ.க கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பாபு என்ற வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
தோல்வியே சந்திக்காத கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்த ஸ்டாலின் 3 முறை தோல்வியை சந்தித்துள்ளார். அவர் திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு அடைந்த முதல் தோல்வியாக இது அமைந்தது. அதேநேரம், ஸ்டாலினின் மகன் உதயநிதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறை வென்றுள்ளார்.
Advertisement
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒருவர் எப்படி முதல்வர் என்று பட்ட பெயர் வைத்து கொண்டு இருக்கிறார் இன்னும். அய்யா , முதலில் முதல்வர் பதவியை விட்டு விலகி விடுங்கள்.
வெறும் பத்தாயிரம் பிளஸ் முப்பதாயிரம் ஓவாயில் தேர்தலை சந்தித்து சாதனை செய்தவர் இரும்புக்கை கோப்பால் சார். அப்பா கொடைக்கானல் போயும் வீணாய்ப் போச்சே.
இனி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பே இல்லை... பாவம் காலம் செய்த கோலம், கடவுள் செய்த விதி... கோவிந்த, கோவிந்த
எம் தமிழ் மக்கா இங்கே எல்லோரும் சந்தோசமா குதுகூலித்து கோட்டைய விட்டு வீட்டுக்கு போகும்....

ஒருவேளை இரும்புக்கை கோப்பால் சார் கொடைக்கானல் போகாமல், மருமகள் பெத்தாச்சி குடியிருக்கும் துபாய்க்கு சென்று இருந்தால், பாலிடால் மாதிரி வெற்றி பெற்று இருக்க முடியுமோ?