Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விசில் அலையில் வீழ்த்தப்பட்ட தேசிய கட்சிகள்!!

விசில் அலையில் வீழ்த்தப்பட்ட தேசிய கட்சிகள்!!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது சிறப்பு நிருபர்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியின் வெற்றியால் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., படுதோல்வி அடைந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.,வும், திமுக கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றன. இந்த இரு தேசிய கட்சிகளும் தங்கள் கூட்டணியிடம் பிடிவாதமாக அதிகமான தொகுதிகளை கேட்டுப் பெற்றன.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பா.ஜ., 26 உட்பட அதன் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் மட்டும் 33 பேர். அதேபோல், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 28 பேர் போட்டியிட்டனர்.
விசில் சின்னத்தில் போட்டியிட்ட விஜயின் தவெக அதிகமான இடங்களை பெற்று முன்னிலை வகிக்கின்றன. ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளுக்கு எதிராக மக்களிடையே 'விசில் புரட்சி'யே ஏற்பட்டது போல, மாநில கட்சிகளை ஓரங்கட்டியது இந்த தேர்தல்.

அதோடு தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரசுக்கும் அதே நிலையே ஏற்பட்டுள்ளது. பா.ஜ., ஒரே ஒரு இடத்திலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. அந்த வகையில் விசில் அலையில் தேசிய கட்சிகள் பலமாக அடிவாங்கியுள்ளன.

Advertisement