Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மம்தா புடவையை ஸ்டாலின் கட்ட வேண்டும்

 மம்தா புடவையை ஸ்டாலின் கட்ட வேண்டும்

'ம.தி.மு.க.,வை, அறிவாலயத்தில் அடக்கம் செய்து விட்டார் வைகோ. விஜயின் ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை, உதயநிதி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

அதுவரை, சிவகார்த்திகேயன் படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. இனி, அவருடைய படம் ஓடாது. அவருக்கு சனி பிடித்துவிட்டது. அதனால் தான், திருநள்ளாறு சென்றிருக்கிறார்.

வாக்காளர் திருத்தப்பணிக் கு எதிராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடை பயணம் போனார். உச்ச நீதிமன்றம் சென்று, தானே வாதாடினார். ஆனால், வாக்காளர் திருத்தப்பணியை எதிர்ப்பதாக நாடகம் போட்ட முதல்வர் ஸ்டாலின், மம்தா முயற்சியில் 1,000ல் ஒரு பங்கை கூட செய்யவில்லை.

அதனால், மம்தா பானர்ஜியின் புடவையை ஒரு வாரம் கடன் வாங்கி அதை ஸ்டாலின் கட்டிக் கொள்ள வேண்டும். அப்பவாவது உணர்ச்சி வருகிறதா என பார்க்கலாம்.

- -நாஞ்சில் சம்பத், பிரசார குழு செயலர், த.வெ.க.,

Advertisement