பா.ஜ., என்று சொல்லக்கூட பயந்து சாகின்றனர்
ஓராண்டுக்கு முன் கட்சியை துவங்கிவிட்டு, நான் தான் முதல்வர் என, சிலர் சொல்லிக்கொண்டு வருகின்றனர். ஆனால், பா.ஜ., என்ற வார்த்தையை சொல்லக்கூட, அவர்கள் பயந்து சாகின்றனர்.
த.வெ.க., தலைவரான நடிகர் விஜய், கரூரில் உயிரிழந்த 41 பேர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை. புது கலாசாரமாக, பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். அவர் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்.
அவருடைய மனைவிக்கும் பிள்ளை களுக்கும் கூட அவர் பாதுகாப்பு அளிக்கவில்லை. அவர் நடித்த ஜனநாயகன் படம், பல பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அதற்கே, அவர் குரல் கொடுக்கவில்லை. அவர் எப்படி ஜனநாயக ஆட்சி நடத்துவார்?
-- கீதா ஜீவன்
தமிழக அமைச்சர், தி. மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்