Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் சொல்வது பொய்: இபிஎஸ்

தொகுதி மறுவரையறை குறித்து ஸ்டாலின் சொல்வது பொய்: இபிஎஸ்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மேட்டுப்பாளையம்: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர் ஸ்டாலின் சொல்வது பொய் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: வாஜ்பாய் பிரதமராகஇருந்த போது மகளிர் இட ஒதுக்கீட்டுமசோதாவுக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். தற்போது அதனை பிரதமர் மோடி நிறைவேற்றுகிறார் தொகுதி மறுவரையறையால் தமிழக தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றனர். கருப்பு கொடி கட்ட சொன்னர். ஆனால், கருப்பு கொடி தெரியவில்லை. ஸ்டாலின் சொல்வது பொய்.

அதிமுக செய்த சாதனைகளை சொல்கிறோம் ஆனால், ஸ்டாலினால் அப்படி சொல்ல முடியவில்லை.தற்போது தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. டில்லிக்கும், தமிழகத்துக்கும் என்ன தொடர்பு? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.மக்கள் விரோத ஆட்சியான திமுகவை அகற்ற தேஜ கூட்டணி அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத காரணத்தினால், தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின்,தனது கட்சி சின்னத்தையே மறந்துவிட்டார். அப்படிப்பட்டவர் நாட்டை பாதுகாக்க முடியுமா? திமுக தலைவருக்கு மறதி என சொல்வார்கள். அது உண்மையாகிவிட்டது. அவர் சேவை செய்வது பத்திரிகைகளில் வரவில்லை. சைக்கிள் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது பத்திரிகைகளில் வருகிறது. இதற்காகவா முதல்வர் ஆக்கியிருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் சாதனை செய்யவில்லை என ஸ்டாலின் பொய் தகவலை பரப்பி வருகிறார்.
செந்தில்பாலாஜியை வெற்றி பெற வைத்தால், மாவட்டம் அம்போ என போய்விடும். கோவை தெற்கு தொகுதிக்கு வந்துள்ள கொரோனாவிற்கு மருந்து இல்லை. அந்த வைரஸ் பாதித்தால் மாவட்டம் முடிந்துவிடும். கரூரை முடித்துவிட்டு கோவை வந்துள்ளார். அதிகாரிகள் இடமாற்றம் போல், கரூரில் இருந்து கோவைக்கு வந்துள்ளார். எம்எல்ஏ, அமைச்சர் பதவி வகித்தவர் அதே தொகுதியில் நிற்க வேண்டும். அங்கு ஓடஓட விரட்டி கோவை தெற்கில் வந்து நிற்கிறார். அனைவருக்கும் நல்லது செய்ய மூளை படைத்துள்ளார். அவருக்கு மட்டும் தீய எண்ணம் தான் தோன்றும். வேறு ஏதும் தோணாது. மக்கள் சேவை செய்ய நிற்கவில்லை. மக்களை வாட்டி வதைக்க வந்துள்ளார். அதற்கு மேல் உங்கள் முடிவு.கூப்பன் திட்டத்தினால் ஒரு உயிர் போய்விட்டது. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement

ஏப் 18, 2026 10:02 am

அப்போ உண்மை என்னான்னு நீரே சொல்லும். என்ன சொல்லணும்ன்னு டில்லிக்கு போயிட்டு வந்தால் தான் உமக்கு தெரியும். அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்படும் கோழைக்கு வாய் எதற்கு?

Reply Rate this

பாஸ் விடியலு எப்ப உண்மைய பேசி இருக்காரு, ஹிந்து வெறுப்பாளன் பொய் மட்டுமே சொல்வாரு

Reply Rate this

UP ku எத்தனை சீட் சொல்லுங்க?

Reply Rate this

கூப்பன் திட்டத்தினால் ஒரு உயிர் போய் விட்டது.. ஆனால் நான் 10000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைப்பேன் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்..

Reply Rate this
ஏப் 16, 2026 07:14 pm

அவர் அரசியல் செய்து பிழைப்பதே அதில் தானே?

Reply Rate this