Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டரை முதல்வர் பயன்படுத்தியது ஏன்: குஷ்பு கேள்வி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டரை முதல்வர் பயன்படுத்தியது ஏன்: குஷ்பு கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துாத்துக்குடி: “பிளாஸ்டிக் லைட்டர் வைத்து தீ பற்றவைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு, அது தடை செய்யப்பட்டது என தெரியவில்லையா?,” என தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து, குஷ்பு பிரசாரம் செய்தார். பின், குஷ்பு அளித்த பேட்டி: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மற்ற மாநிலங்களில் யாரும் போராட்டம் நடத்துகிறார்களா? தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்து விட்டது. மத்திய அரசுக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டர் வைத்து தீயை பற்ற வைக்கிறார்.

பிளாஸ்டிக் லைட்டருக்கு தடை இருக்கிறது என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? இந்த லட்சணத்தில் நீங்கள் மாநிலத்தை காப்பாற்ற போகிறீர்களா? பரபரப்பான செய்திக்காக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டர் வைத்து போராடுவதில் இருந்து அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

பிரதமரை பார்த்து மிரட்டும் முதல்வரே, உங்கள் குரல் எப்படி இருக்கு? வேறு மாநிலத்தில் இருந்து, தமிழக முதல்வரை, இப்படி மிரட்டி இருந்தால் தி.மு.க.,வினர், எப்படி எதிர்வினையாற்றி இருப்பார்கள்? தி.மு.க.,வினர் சுயமரியாதையை மறந்து, தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர். கருணாநிதி காலத்து தி.மு.க.,வை புதைத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement