Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அத்திக்கடவு திட்டம் முழுமையாக்கப்படும்! அவிநாசி தொகுதி பா.ஜ.வேட்பாளர் முருகன் உறுதி

 அத்திக்கடவு திட்டம் முழுமையாக்கப்படும்! அவிநாசி தொகுதி பா.ஜ.வேட்பாளர் முருகன் உறுதி

அவிநாசி: ''அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி அவிநாசி பகுதி முழுவதும் பசுமையான பகுதியாக மாற்ற முயற்சிப்பேன்,'' என, பா.ஜ., வேட்பாளர் முருகன் பிரசாரம் செய்தார்.

அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் முருகன், வடுகபாளையம், பிச்சாண்டம்பாளையம், காரைக்குட்டை, புஞ்சை தாமரைக்குளம், போத்தம்பாளையம்,புலிப்பார், தத்தனுார் ஆகிய கிராமங்களில் பிரசாரம் செய்தார். அவருக்கு, பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து வேட்பாளர் முருகன் பேசியதாவது:

அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி ஆட்சியில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்து, அவிநாசி தாலுகா முழுவதும் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றியுள்ளார். ஆனால், இன்னும் கூட ஒரு சில பகுதிகளுக்கு அத்திக்கடவு திட்டம் இணைக்கப்படாமல் உள்ளது.

வரும் தேர்தலில், நாம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அனைத்து பகுதிகளுக்கும் அத்திக்கடவு - அவிநாசி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்து அனைத்து பகுதிகளையும் விவசாயம் செய்யும் வகையில், செழுமையாக மாற்றுவோம்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம், 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கும் இலவச பேருந்து, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துதல் ஆகியன நிறைவேற்றப்படும். அதேபோல, விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம்.

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக, 6 ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் மோடி அளித்து வருகிறார். இந்த முறை, ஓட்டுப்பதிவு மெஷனில், இரட்டை இலைக்கு பதில், தாமரை சின்னம் தான் இருக்கும். அதற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது, ஒரு சில ஏ.டி.காலனியில், தெலுங்கு மொழியில் மக்களிடம் பேசி, 'உங்களது மகன், அண்ணன் மற்றும் தம்பி ஆகியோரிடம் சொல்லி தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்,' என்றார். அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisement