வட்டமிடும் கருடன்; உற்சாகத்தில் வேட்பாளர்கள்
திருவாடானை தொகுதியில், கிராமம் கிராமமாக பிரசாரத்துக்கு செல்லும் வேட்பாளர்கள், கூடியிருக்கும் மக்கள் மத்தியில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். அப்போது, சில கிராமங்களில் வானில் கருடன் வட்டமிடுகிறது.
கருடனை பார்த்ததும், 'ஆஹா, நமக்கு ஆதரவாக கருடன் வட்டமிடுகிறது; வெற்றி நமதே' என வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சில முதியவர்கள், 'இது வெற்றிக்கான அறிகுறி தான்; தெய்வீக அங்கீகாரம்' என வேட்பாளர்களுக்கு துாபம் போடுகின்றனர். ஆனால், கருடனோ, பாரபட்சம் பார்க்காமல், எந்த வேட்பாளர் வந்தாலும், வஞ்சனையின்றி வானத்தில் ஒரு ரவுண்டு வட்டமிட்டு செல்கிறது.
ஆனாலும், 'சென்டிமென்ட்' காரணமாக, எந்த கிராமத்துக்கு பிரசாரம் செய்ய சென்றாலும், கருடனையும் வேட்பாளர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்