Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


முதல்வருக்கு நாவடக்கம் வேண்டும்: இபிஎஸ் காட்டம்

முதல்வருக்கு நாவடக்கம் வேண்டும்: இபிஎஸ் காட்டம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விழுப்புரம்: ''வாய், நாக்கு இருந்தால் ஏது வேனாலும் பேசிவிடலாமா? எங்களுக்கு பேச தெரியாதா? எங்களுக்கு நாக்கு இல்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை'' என, பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் காட்டமாக பேசினார்.
விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ் பேசியதாவது: நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். நான் ஏதோ திண்ணையில் படுத்து கிடந்தேன் என்கிறார். இவர் கண்டுபிடித்து விட்டார். முதல்வர் ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் பேசுவது நான் முத்துவேல் கருணாநிதி மகன் என்கிறார், முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயிலில் வந்தார். ஏன் எங்களுக்கு சொல்ல தெரியாதா?

நாவடக்கம் வேண்டும். முதல்வராக, கட்சிக்கு தலைவராக இருக்கறீர்கள். பொறுப்போடு பேச வேண்டும். பொறுப்பு தவறி பேசினால், எங்கள் தொண்டன் கூட பொறுத்து கொள்ள முடியாது. திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கு இவ்வளவு என்றால், ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்து, உழைத்து, உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
வாய், நாக்கு இருந்தால் எது வேண்டுமானாலும் பேசிவிடலாமா? எங்களுக்கு பேச தெரியாதா? எங்களுக்கு நாக்கு இல்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை. உங்களது கட்சி பொதுச்செயலாளர் ராஜாவை தட்டி கேட்க தெம்பு திராணி இல்லாத முதல்வர் ஸ்டாலின். ஒரு முன்னாள் முதல்வர் கருணாநிதியை, அப்பாவை சிறையில் வீட்டில் அடைத்து இருக்கீங்க என்றால் நாட்டு மக்களுக்கு என்ன கதி? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

Advertisement

ஏப் 05, 2026 05:48 pm

கார பொறி கொஞ்சம் வாங்கி கொடுங்க. அதை மென்னுக்கிட்டு சும்மா உட்கார்ந்திருப்பார்.

Reply Rate this
ஏப் 05, 2026 05:21 pm

உங்களுக்கு நாவடக்கம் தேவை . இல்லை என்றால் DMK ஆட்சி வந்த உடன் உங்கள் மேலே உள்ள அத்தனை வழக்குகளும் ஜெயலலலிதா மர்ம மரணம் , கொடநாடு கொலை வழக்கு, STERLITE துப்பாக்கி சூடு சம்பவம் ,பொள்ளாச்சி பாலியல் வழக்கு நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வர வேண்டும் என்பதே தமிழ்நாடு மக்களின் எண்ணம்.

Reply Rate this
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை . ஸ்டா ஆட்சியில் பதவியுயர்வு.
ஏப் 05, 2026 07:56 pm
Rate this
ஏப் 05, 2026 04:55 pm

ஒரு திமுகக்காரனை பார்த்து இப்படி பேசலாமா. . நாவை விற்றே 75 வருடமாக வளர்ந்த கட்சி.

Reply Rate this
அதிமுக பொதுச் செயலாளரின் சேர்மானம் சரியாக இல்லாததே இதற்கு காரணம்
ஏப் 05, 2026 05:47 pm
Rate this
ஏப் 05, 2026 03:15 pm

EPS is waste. He heads another DMK. When a you tuber released the audio tape of such big scandal 2g, EPS shall ask about it? He must demand a statement from CM, Stalin, Kani etc. Instead of talking about serious matters, particularly corruption ges, both they keep silent or talk useless things.. Stalin and EPS have a very good understandings. Kodanadu triple murder is yet to be solved.

Reply Rate this
ஏப் 05, 2026 03:00 pm

அடுத்து அதிமுக ஆட்சி அமைத்தவுடன்....

Reply Rate this

தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டே தமிழர்களை ஏமாற்றி நாகரீகம் இல்லாமல் பேசி வருபவர்களை தமிழ் மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும்.

Reply Rate this
ஏப் 05, 2026 02:21 pm

தினம் ஒரு குற்றம் சொல்லி மேடை பிரச்சாரம் செய்யாமல். இவர் சொல்வார் பக்கத்தில் இருப்பவர்களை பார்த்து சிரிப்பார், உடனே ஜால்ராகோஸ்ட்டிகள் கைதட்டும் அதை பார்த்து மக்களும் கைதட்டுவார்கள், மனசுக்குள் நினைப்பார் எனக்கு ஒட்டு தான் என்று. ஐயா நீங்க என்ன மக்களுக்கு செய்விங்க என்று சொல்லுங்க,

Reply Rate this
ஏப் 05, 2026 02:04 pm

நாவடக்கம் என்ன நாவடக்கம்… நல்லொழுக்கம் வேண்டும். அப்பச்சி போல நேர்மையாக இருக்க வேண்டும்.

Reply Rate this
ஏப் 05, 2026 01:46 pm

நாவடக்கம் என்ட்ரால் என்ன என்றெல்லாம் தெரிந்திருக்க நியாமில்லை

Reply Rate this
ஏப் 05, 2026 01:44 pm

உங்களுக்கு ஆக்டர் விஜய்தான் சரியான ஆளு. அது மாதிரி இபிஎஸ் பேசலை.அது மாதிரி இபிஎஸ் பேசணும். தடி எடுத்தவர்களுக்கு அதே தடியை புடுங்கி அதனாலேயே நாலு சாத்து சாத்தணும்.

Reply Rate this