Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பிடித்த தலைவர்களுக்காக ஓட்டு போடும் தேர்தல் அல்ல

 பிடித்த தலைவர்களுக்காக ஓட்டு போடும் தேர்தல் அல்ல

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அவரது மகனும் எம்-.பி.,யுமான கார்த்தியும், காரைக்குடி தொகுதியை மொத்தமாக பிடித்து வைத்துள்ளனர். மாங்குடியை எம்.எல்.ஏ., என சொல்வதை விட, சிதம்பரம் குடும்பத்தின் பி.ஏ., என்று சொல்லலாம். வேட்பாளர்களுக்கு காரைக்குடி சாப்பாடு போட்டு அனுப்புங்கள் என கார்த்தி எம்.பி., சொல்கிறார். நீங்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால், எதற்காக மற்றவர்கள் வந்து இங்கு போட்டி போடப் போகின்றனர்.
காங்., கட்சியால் எந்த பயனும் இல்லை; மக்களும் அந்த கட்சியை விரும்பவில்லை; கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது காங்கிரஸ். தமிழகத்தில் பிரசாரத்திற்காக ராகுல் வந்ததே இல்லை. இந்த தேர்தல், பிடித்த தலைவர்களுக்கு ஓட்டு போடும் தேர்தல் இல்லை; ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். காலம் வரும்போது பிடித்தவர்களுக்கு ஓட்டு போடலாம். இப்போது, தி.மு.க., ஆட்சி வெளியேற வேண்டும்.

- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement