Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பா.ஜ.,வின் 'பி டீம்' விஜயின் த.வெ.க.,

 பா.ஜ.,வின் 'பி டீம்' விஜயின் த.வெ.க.,

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தது, அ.தி.மு.க.,வில் உள்ள சிலருக்கே பிடிக்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை. பா.ஜ.,வின் கிளை கழகமாக அ.தி.மு.க., மாறி விட்டது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி. விஜயின் த.வெ.க.,வில் வேட்பாளர் அறிவிப்பு, அதன் செயல்பாடுகள் ஆகியவற்றின் வாயிலாக அக்கட்சி, பா.ஜ.,வின் 'பி டீமாக' செயல்படுவதை பார்க்க முடிகிறது.
மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்டம், 'எய்ம்ஸ்' போன்ற திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பர். தேர்தலின்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரிகள் மாற்றம் நடக்கவில்லை. இணையதளத்தில் ஜனநாயகன் படம் 'லீக்' ஆனது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

- துரை முதன்மை செயலர், ம.தி.மு.க.,

Advertisement