இந்த சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது; அண்ணாமலை திட்டவட்டம்
நமது நிருபர்
நாளை(ஏப்.17) மாலை 4 மணிக்கு பார்லிமென்டில் ஓட்டு போட்ட பிறகு, 4.05 மணிக்கு இந்த சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கியில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தின் முதல்வர், திமுகவின் தலைவர் ஸ்டாலின் இந்த சட்ட திருத்தத்தை கொளுத்தி கொண்டு இருக்கிறார். திமுககாரர்களிடம் தெரியாமல் கேட்கிறேன்.
இந்த சட்ட திருத்தம் என்ன சொல்லுது? பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு. யாருக்காவது சட்டத்திருத்தத்தில் பிரச்னையா? யாருக்கும் இல்லை. தமிழகத்தில் இன்றைக்கு 39 எம்பிக்கள் இருக்கிறார்கள். இந்த சட்ட திருத்தம் வந்த பிறகு, 59 ஆக உயர இருக்கிறது.
51% உயர்த்தி 39 இல் இருந்து 59 ஆக உயர்கிறது. கேரளாவில் 20 எம்பிக்களில் இருந்து எண்ணிக்கையை 30 ஆக பிரதமர் மோடி உயர்த்துகிறார். கர்நாடகாவில் 28 எம்பிக்கள் இருக்கிறார்கள். தற்போது பிரதமர் 42 ஆக உயர்த்துகிறார். தெலுங்கானாவில் 17 எம்பிக்கள் இருக்கிறார்கள்.
தற்போது 26 ஆக உயர்கிறது. ஆந்திராவில் 25 எம்பிக்கள் இருக்கின்றனர். தற்போது 38 ஆக உயர்கிறது. ஆக மொத்தம் தென்னிந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திற்கும், 50 சதவீதம் பிரதமர் மோடி உயர்த்துகிறார். எல்லா மாநிலத்திலும் 50% உயர்த்தப்படுகிறது.
யாருக்கும் பிரச்னை இல்லை; இருக்கக்கூடிய சீட் எண்ணிக்கையை குறைக்கவில்லை. சீட் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கிறோம். இன்றைக்கு தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்கள் சேர்ந்து பார்லிமென்டில் 23.9% எம்பிக்கள் இருக்கிறோம்.
உயர்த்திய பிறகு மறுபடியும் நாம் 29.9% இருக்கிறோம். தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி என்ன குறை வைத்தார். பார்லிமென்டிற்குள் பெண்கள் வரவேண்டும் என்பது பிரதமர் மோடியின் ஒற்றை எண்ணம்.
சகோதரிகள் பார்லிமென்ட் மற்றும் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு சட்டத்தை கூட எதிர்த்து காலையிலிருந்து கருப்பு சட்டை போட்டுக் கொண்டு, எதற்கு எதிர்க்கிறோம் என்றே தெரியாமல் பொய்யை பேசிக்கொண்டு ஒரு கூட்டம் சுற்றி கொண்டு இருக்கிறது. சகோதரிகளை இவர்களை மன்னிக்கவே கூடாது. 39இல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாம் மக்கள் தொகை அடிப்படையில் செய்யவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் செய்திருந்தால் தமிழகத்திற்கு பிரச்னை வந்து இருக்கும். அது பிரதமர் மோடிக்கும் தெரியும். நாம் மக்கள் தொகை சதவீதத்தை குறைத்து இருக்கிறோம். நாளை(ஏப்.17) மாலை 4 மணிக்கு பார்லிமென்டில் ஓட்டு போட்ட பிறகு, 4.05 மணிக்கு இந்த சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
Advertisement
மக்கள் தொகை அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கை இருக்கவேண்டும். பணம் கொடுத்து ஒட்டு வாங்கும் கேடி கட்சிகளை தடை செய்ய வேண்டும்.

1). எல்லா மாநிலங்கள் முழுவதுமாக MP தொகுதிகளை 50 சதவீதம் அதிகரிப்பது என்ற சட்டம் மற்றும் கொள்கை வரவேற்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
2). ஒரு MP அவர்கள் இவ்வளவு மக்களுக்கு தான் சேவை செய்ய முடியும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. அதுதான் பிராக்டிகல் ஆன உண்மையும் கூட. அதிக ஜனத்தொகை ஒரு MP சமாளிக்க முடியாது. ஒவ்வரு 10 அல்லது 15 வருடம் MP எண்ணிக்கை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
3). அதேபோல ஒரு MP தொகுதியின் சுற்றளவை நிர்ணயம் செய்ய வேண்டும். உண்மையில் 50 முதல் 60 KM சுற்றளவு தான் ஒரு MP கவர் பண்ண முடியும்.
4). குறைந்தது 15 நாட்கள் ஒரு MP தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்று கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று சட்டம் பரிந்து உரைக்க வேண்டும். இதில் அமைச்சர்கள் மற்றும் சில பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு அளிக்கலாம்.
5). ஒவ்வரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை MPகள் தங்கள் தொகுதியில் செய்த வேலைகள் குறித்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், ராஜ்ய சபா அமைச்சர் மற்றும் அந்த அந்த மாநில முதல்வர் அவர்களுக்கு ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்பொழுது தான் தொகுதி முன்னேற்றம் அடையும்.
6). இண்டி கூட்டணி ஒரு சட்டத்தை எதிர்கிறது என்றால் அது மக்கள் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சட்டம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்று மக்கள் தற்போது நன்கு அறிவர்.