Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திமுக அதிகார துஷ்பிரயோகம்; தேர்தல் அதிகாரியிடம் பாஜ புகார்

திமுக அதிகார துஷ்பிரயோகம்; தேர்தல் அதிகாரியிடம் பாஜ புகார்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''திமுக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது,'' என, தேர்தல் அதிகாரியிடம் தமிழக பாஜ புகார் அளித்துள்ளது.

தமிழக பாஜ வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமரகுரு கூறியதாவது:தமிழகம் முழுதும், 8,000 ரூபாய் கூப்பன் விளம்பர அனுமதியை பெற்று விட்டு, கூப்பன் முறையிலேயே, திமுக கொடுத்திருக்கிறது.

திருவாரூரில், பாஜ பிரசாரம் செய்ய அனுமதி கேட்டதற்கு, ஆய்வாளர் அனுமதி கொடுத்து விட்டார். ஆனால், அங்கு ஏற்கனவே திமுக பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்து விட்டதால், பாஜவுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காரைக்குடி, சிவகங்கை, மதுரையில், மூத்த குடிமக்கள் தபால் ஓட்டளிக்க, விஏஓவை அழைத்து செல்லாமல், அதிகாரிகள், 1,000 ரூபாய் பணத்தை கொடுத்து, திமுகவுக்கு ஓட்டளியுங்கள் என்று கூறியுள்ளனர். இப்படி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் திமுக மற்றும் அரசு அதிகாரிகள் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement