காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது: அண்ணாமலை பேட்டி
சென்னை: காலங்கள் இருக்கிறது; காட்சிகள் மாற தான் போகிறது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நான் கட்சிக்கு ரொம்ப நாட்களுக்கு முன்பாக, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டேன். மாநிலத்தின் கோர் கமிட்டியில் என்னுடைய கருத்தை இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லி இருந்தேன். கோர் கமிட்டியில் இருந்து தலைமைக்கு போன பட்டியலில் என் பெயர் கிடையாது. பியூஷ் கோயலிடமும் ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தேன்.
என்னுடைய கடமை
கட்சி என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து, என்னை பிரசாரத்திற்கு பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி தான். காரணம் இந்த தேர்தலை பொறுத்தவரை எல்லோருக்கும் பணி செய்கிறேன். தமிழகம் முழுவதும் பாஜ வேட்பாளர்கள் 27 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் எல்லோருக்கும் நான் பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு ஊராக சென்று பிரசாரம் செய்கிறேன். கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என்னுடைய கடமையாக பார்க்கிறேன்.
பிரசாரம்
எப்போதும் நான் வேட்பாளர் ரேஸில் இல்லை. எந்த தொகுதியையும் நான் கேட்கவில்லை; போட்டி போடவில்லை. நான் கேட்கவும் மாட்டேன்; அது என்னுடைய பழக்கமும் கிடையாது. என்னுடைய வேலை ஏப்ரல் 21ம் தேதி வரை பிரசாரம் செய்வது, அதன் பிறகு மற்றவை குறித்து பேசுகிறேன். இந்த முறை என்னுடைய சண்டை தமிழகம் முழுவதும் பிரசாரம் மூலம் தான்.
2024ல் பார்லிமென்ட் தேர்தலில் நான் போட்டியிட்ட போது, எனக்கு சிறிய வருத்தம் இருந்தது. நம்மை நம்பி நிறைய வேட்பாளர்களை போட்டி போட வைத்தோம். ஆனால் என்னால் அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முடியவில்லை. அந்த மன குறையை 2026ம் ஆண்டு தேர்தலில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை.
காட்சிகள் மாறும்
காலம் இருக்கிறது. காட்சிகள் மாற தான் போகிறது. நிறைய தேர்தல் வர தான் போகிறது. அன்னைக்கு நாம் போட்டி போட்டு கொள்ளலாம். அதனால் நம்முடன் அன்போடு இருக்க கூடிய மக்கள் எப்பொழுதும் அன்போடு தான் இருப்பார்கள். இந்த தேர்தலில் நமது சண்டை என்பது தமிழகம் முழுவதும் போக வேண்டும். திமுகவின் தவறுகளை எடுத்து சொல்ல வேண்டும். அதற்கு நாம் வலிமையாக பேச வேண்டும். அது என்னுடைய பொறுப்பாக பார்க்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Advertisement
தாகத்துக்கு தண்ணி கேட்டா 16க்கு கொடுத்து பிரயோசனம் இல்லை தலைவரே அன்று தமிழகம் என ஒன்று நன்றாக இருக்குமா?
உபி யில் ஒரு யோகி ஆதித்யநாத்தை தயார்படுத்தியதை போல , இவரும் ஒரு அசைக்க முடியாத கொள்கை பிடிப்பாளராக , மந்திர தந்திர , அரசியல் , சூழ்ச்சிகள் , எல்லாவற்றையும் உடைப்பவராக , , புரட்சித்தலைவர் எம்ஜியார் போல , , உருவாக்கலாம் என்று பிஜேபி தலைமை காத்திருக்கலாம் போல . . பிஜேபியை ஆட்சியை பிடிக்கும் , பிடித்து ஸ்ட்ராங்கா நிலைக்க முடியும் . , .
இறைவனால் கிடைத்த நேர்மையான திறமையான துணிச்சலான அண்ணாமலையை கட்சியில் ஒதுக்கியதும் மனம் கனக்கிறது.... வேதனையாய் இருக்கிறது. நல்லவர்களை எளிதாக வீழ்த்தி திருடர்கள் பலம் பெறுகிறார்கள். கலிகாலம் என்பது இதுதான்
நாய் வாலை நிமிர்த்த முடியாது நீங்கள் தனி கட்சி ஆரம்பித்து விடுங்கள் உங்கள் நேரத்தை வீண் அடிக்காதீர்கள்
எடப்பாடி ஸ்டாலினை விட அண்ணாமலை மீது தான் அதிக கோபத்தில் இருக்கிறார் என்பது அண்ணாமலைக்கு தெரியும். அதனால் அதிமுகவினர் உள்ளடி வேலை செய்வார்கள் என்பதும் அண்ணாமலைக்கு தெரியும்.
நேர்மையாக இருந்தால் அரசியலில் வெற்றிபெற முடியாது என்பதற்கு அண்ணாமலை உதாரணம்.
எதிரி கட்சிகளை வீழ்த்துவதை விட சொந்த கட்சியில் உள்ள கயவர்களை வீழ்த்துவதே முக்கியம் என்பதை உணர்ந்து இனி வரும் காலங்களில் அண்ணாமலை பயணம் தொடரவேண்டும். தனி கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வெற்றிக்கு பிறகு மோடிக்கு ஆதரவு அளிக்கலாம். அப்போது தான் தமிழகத்தின் மதிப்பு அதிகரிக்கும்
அண்ணாமலை தலைமையில் பாஜக இனி வரும் காலங்களில் தனிப்பெரும்பானையுடன் ஆட்சி அமைக்கத்தான் போகின்றது. இதில் சந்தேகம் வேண்டாம். இந்த தேர்தல்தான் திராவிடத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம். திராவிடத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்று பல நூல்கள் வரத்தான் போகின்றது.
கடந்த ஐந்து வருடங்களில் பேசிய மேடைப்பேச்சுகள், நடத்திய போராட்டங்கள், பாதயாத்திரைகள், தொடுத்த வழக்குகள் வாக்காளர்களிடம் ஏற்படுத்தாத தாக்கத்தினை இந்த 18 நாட்கள் பிரச்சாரம் ஏற்படுத்திவிடுமா? நமது நாட்டில் முதல் தேர்தலில் பல நேர்மையான நல்லவர்கள் இதுபோல போட்டியிடாமலும் அரசாஙக வேலையில் அமராமலும் ஒதுங்கியதன் விளைவு தான் தற்காலிக அரசியல் மற்றும் அரசாங்க சூழ்நிலைக்கு காரணம்.
திரு அண்ணாமலை, கடந்த 60 ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் கட்சிகளுக்கு ஒரு சிறந்த மாற்று அரசியல் தலைவர். உள்ளூர் முதல் உலக விவகாரங்கள் வரை, புள்ளி விவரங்களுடன் பேச தெரிந்த சிந்தனையாளர். கட்சியின் குறிக்கோள்களுக்காக, பொறுமை காக்கும் தலைமைப் பண்புடையவர். நிச்சயம் , தமிழக அரசியல் கலாச்சாரத்தை மாற்றும் சக்தி அவருக்கு உண்டு. அவரைப் புரிந்து கொண்டவர்கள் அவரைப் போல பொறுமை காக்க வேண்டும். பேராசிரியர் ராம. ஸ்ரீனிவாசன் மற்றுமொரு சிறந்த கண்ணியம் மிக்க அரசியலாளர். இவர்களை போன்ற அரசியல் வாதிகள்தான் தமிழகத்தின் தேவை.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக புரையோடிக்கிடக்கும் மலினம், ஊழல், பணபலம், வன்முறை மற்றும் அநாகரிகம் நிறைந்த அரசியலை ஒரு சிலரால் சில ஆண்டுகளில் மாற்றி விட முயடியுமா?

இந்த நேரத்தில் நான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டுதான் சரியாக பாடவரும்.