Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தமிழகத்தில் சுயேட்சைகளே இல்லாத இரு தொகுதிகள்!

தமிழகத்தில் சுயேட்சைகளே இல்லாத இரு தொகுதிகள்!

சென்னை: தமிழகத்தில் கிணத்துக்கடவு, அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களே இல்லை. தொண்டாமுத்தூர் தொகுதியில் 16 சுயேட்சைகள் களத்தில் இருந்தும் ஒருவர் கூட பிரசாரத்தில் இறங்காதது கூடுதல் சுவாரசியம்.
234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட தமிழக சட்டசபை தொகுதிகளின் ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மக்களும் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொதுவாக, சட்டசபை தொகுதிகளில் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் நிலைப்பாடும், செயல்பாடுகளும் கவனிக்கப்படுவது உண்டு. அவர்களின் பிரசார உத்திகள், வாக்குறுதிகள், பரிசு பொருட்கள் மக்களை கவருவதும் வழக்கம். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இணையாக அல்லது ஈடுகொடுக்கும் வகையில் சுயேட்சை வேட்பாளர்களின் செயல்பாடுகளும் இருக்கும்.
பிரசாரத்தில் மட்டுமல்ல... ஒட்டு எண்ணிக்கையின் போதும் சுயேட்சைகளின் பங்களிப்பு என்பது கவனிக்கக்கூடிய வகையில் அமைவதும் உண்டு. ஆனால், தமிழகத்தில் 234 தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டும் இம்முறை ஒரு சுயேட்சை வேட்பாளர்கள் கூட களத்தில் இல்லை.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் இம்முறை ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட களத்தில் இல்லை. இந்த தொகுதியில் இம்முறை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். காங்கிரஸ்,. அதிமுக, தவெக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் என 5 கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
தமிழகத்திலேயே சுயேட்சைகளே இல்லாத, குறைவான அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் இருக்கும் தொகுதியாக அம்பாசமுத்திரம் இருக்கிறது. இதேபோன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியிலும் ஒரு சுயேட்சை வேட்பாளர்கள் கூட களத்தில் இல்லை. இந்த இரண்டு தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் இல்லாத நிலையில் விஐபி தொகுதியான தொண்டாமுத்தூரில் களத்தில் உள்ள 16 வேட்பாளர்களில் ஒருவர் கூட பிரசாரத்திற்கு போகாமல் இருந்தனர் என்பது கூடுதல் சுவாரசியம்.

Advertisement

மே 04, 2026 08:13 am

முன்பு சுயேச்சையாக போட்டி இடுபவர்கள் ஜனநாயகத்தில் அனைவரும் போட்டியிடலாம் என்று பலர் போட்டியிட்டனர். இன்று பெரிய கட்சி தங்களின் அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சியின் ஓட்டுக்களை பிரிப்பதற்காக சுயேச்சைகளை நிறுத்துகிறது. பிராடுகள்.

Reply Rate this

நாம் டுமிழன் கட்சியினர் ஒருவகையில் சுயேட்சைகள் தான். எப்போதும் வெற்றி பெறாத கட்சியை என்ன சொல்வது.

Reply Rate this